அன்புமிக்க ஓபிசி உறவுகளே!

அன்புமிக்க ஓபிசி உறவுகளே!

-----------------------------------------------

தமிழ்நாட்டின் மிகப்பெரும்பான்மையான சமூகமாக இருப்பது நமது ஓபிசி பிரிவுதான்.

முக்குலத்தோர், முத்திரையர், வன்னியர், கொங்கு வெள்ளாளக் கவுண்டர், நாடார், வெள்ளாளர், வேளார், மருத்துவர், நாயக்கர், செட்டியார் என நூற்றுக்கும் மேற்பட்ட சாதிப்பிரிவுகளை கொண்டதுதான் ஓபிசி வகுப்பு.

தமிழ்நாடு அரசு இந்த ஓபிசி பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50% இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.

இந்திய அரசு, மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஓபிசி பிரிவினருக்கு மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 27% மட்டுமே இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.





ஆகப் பெரும்பான்மையாக உள்ள சமூகத்திற்கு மிகக்குறைந்த அளவில் இடஒதுக்கீடு வழக்கிவிட்டு, ஆகச்சிறுபான்மை மக்களாக இருக்கக்கூடிய பார்ப்பனிய உயர்சாதி பிரிவினருக்கு அவர்களின் மக்கள்தொகை விழுக்காட்டிற்கும் அதிகமாக 10% இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.

மிகப்பெரிய போராட்டத்தின் விளைவாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஓபிசி பிரிவினருக்கு கிடைத்த குறைந்தபட்ட 27% இடஒதுக்கீட்டையும் தற்போது மருத்துவப் படிப்பில் மறுத்துள்ளது மத்திய அரசு.

இதனால் மருத்துவப்படிப்பில் தமிழ்நாட்டில் சுமார் 500 ஏழை ஓபிசி பிரிவு மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியக் கட்டமைப்பில்...
உழைக்கும் மக்களாக,
உணவை உற்பத்தி செய்யும் சமுகமாக,
பெறும்பான்மை மக்களாக உள்ள
ஓபிசி உறவுகளே!
நமக்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியுமா?

ஒவ்வொரு இந்தியக் கட்சிகளிலும் ஆகப்பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட நாம் நமக்கான உரிமைகளைப் பெற முடியாமல் உள்ளோம் என்பது தெரியுமா?

மத்தியில் ஆளும் பாஜக விலும் அதிக எண்ணிக்கையில் நாம்தான் உறுப்பினராக இருக்கிறோம். ஆனால் நாம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மறுக்கப்பட்டு வருகிறோம் தெரியுமா உங்களுக்கு?

நம்மை ''ஆண்ட சாதிப் பெருமைக்குள்'' தள்ளிவிட்டு ஆட்சி அதிகாரத்தில் உள்ள பார்ப்பனியம் நமது உரிமைகளை களவாடி வருவதை உணராமல் உள்ளோம்!

8 லட்சம் வருமானம் பெற வாய்ப்புள்ள பார்ப்பனிய உள்ளிட்ட உயர்சாதி வகுப்பினர், கல்வி வேலைவாய்ப்பில் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்தாலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட ஓபிசி- சமூகங்களின் இடங்களைப் பறித்து தனக்கான இடஒதுக்கீடாக 10% தை தானாகவே எடுத்துக்கொண்டுள்ளது.

இடஒதுக்கீடு என்பதை மிகவும் இழிவாகவும், தகுதிக்குறைவாகவும் விமர்சித்துவந்த பார்ப்பனியம் தற்போது மற்றவர்களின் இடஒதுக்கீட்டை தட்டிப்பறித்துள்ளது.

பெரும்பான்மைச் சமூகமான நமது ஓபிசி சமூகத்தை வெற்று சாதிப் பெருமைக்குள்ளேயே வைத்திருக்கப்போகிறோமா? இல்லை நமக்கான உரிமைக்காக குரல்கொடுக்கப்போகிறோமா?

ஓபிசி பிரிவில் உள்ள நாம் மதத்தின் பெயராலும் சாதிப் பெருமையின் பெயராலும் பிரிந்து நமது உரிமையை இழந்து வருவதை உணர்கின்றீர்களா?

முன்பெல்லாம் மதங்கள் வேறானாலும் இனமாய் ஒன்றுபட்டு நின்றோம்! இப்போது மதமாய் பிரிந்து உரிமைகளை இழந்து நிற்கிறோம்!

ஓபிசி உறவுகளே! ஒன்றுபடுங்கள்! உரிமைகளை வென்றெடுப்போம் வாருங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா