பெருமை கொள்கிறேன்

 

பெருமை கொள்கிறேன் 

                       - அபிநந்தினிமோகன்


பெருமை கொள்கிறேன்

பெண்ணாய் பிறந்ததற்கு அல்ல

என் அப்பாவிற்கு

பெண்ணாய் பிறந்ததற்கு

 

வேலையின் அலுப்போ

களைப்போ எதுவாயினும் ஒன்றுமில்லாத

அன்றாட நிகழ்வுகளைக்கூட இன்றுவரை

சலிப்பில்லாமல்

களிப்புடன் கேட்கும்

கடவுள்.

 

அரசாங்கம் இல்லை

அரண்மனை இல்லை

என் இதய

அரியாசனத்தின் அசைக்கமுடியா

அரசன்

நானும்கூட இளவரசிதான்

அரசனால் வளர்க்கப்படுகிறேனல்லவா?

 

அன்புசெய்வதில்

அன்னைக்கு நிகரானவர் 

அடித்து மிரட்டாதவர்

அருகில் அவர் இருக்க

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்பதில்லையே.

 

இறைவனுடன் எல்லாம் ஒப்பிடமாட்டேன்

வணங்கினால் மட்டுமே வருவானவன்

சுணங்கினாலே அருளும் ஆண்டவன்

என் தாயுமானவன்

பெருமை கொள்கிறேன்

என் அப்பாவிற்கு

பெண்ணாய் பிறந்ததற்கு...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா