பேராவூரணி யை பாதுகாப்போம்
பேராவூரணி யை பாதுகாப்போம்
-----------
பேராவூரணி ஆவணம் சாலை பெரியகுளம் அருகில் அரசு டாஸ்மாக் மதுக்கடை அமைக்க இருப்பதாக செய்திகள் பரவிய வண்ணம் உள்ளது.
பொது மக்களும் இளைஞர்களும் ஒன்று திரண்டு 564 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளத்தை தூர்வாரி பாதுகாத்து வருகிறோம்.
இந்நிலையில் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கும் குடியிருப்பவர்களுக்கும் அச்சுறுத்தலாக மதுக்கடையை அமைக்க நினைப்பது அறம் ஆகுமா?
டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிரான சூழல் பேராவூரணி பகுதியில் நிலவி வருவது டாஸ்மாக் நிர்வாகத்திற்கு நன்றாகவே தெரியும். குறிப்பாக சேது சாலை பட்டுக்கோட்டை சாலை முதன்மைச் சாலை பகுதிகளில் மதுக்கடை அமைக்க இருந்த நேரத்தில் பொதுமக்கள் தாய்மார்கள் ஒன்று திரண்டு எழுச்சிப் போராட்டங்களை நடத்தி தடுத்து நிறுத்தினார்கள்.
இந்நிலையில் மீண்டும் பேராவூரணி பகுதிக்குள் டாஸ்மாக் மது கடை அமைக்க நினைப்பது பொது மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது.
பேராவூரணி பெரிய குளத்திற்கு அருகில் டாஸ்மாக் மது கடை அமைக்க முயற்சித்தால் இளைஞர்கள் பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.
எனவே வருவாய்த்துறை உடனடியாக தலையிட்டு இப்பகுதியில் மதுக்கடை அமைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக