ஓபிசி உறவுகளே! வெளியேறுவோம்...
ஓபிசி உறவுகளே!
வெளியேறுவோம்...
-------------------------------
உறுப்பினர் அட்டைகளை
உதரிவிட்டு வெளியேறுங்கள்...
கொடிகள் கட்டாதீர்கள்...
கூட்டத்திற்குப் போகாதீர்கள்...
வாழ்க முழக்கம் வேண்டாம்...!
முதலாளிய கட்சிகள் சம்பாதிக்க
முதலீடா நீங்கள்?
அவர்கள் வரிச்சுருட்ட
வாங்கு வங்கியா நீங்கள்?
ஓ பி சி யின் உரிமைகள் பறிபோகிறது
மருத்துவம் படிக்க ஒபிசி
ஒதுக்கீடு இல்லையாம்!
எட்டு லட்சம் சம்பாதிப்பவன்
ஏழையாம்!
ஏற்றத்திற்கான மாற்றைக் கேட்டால்
ஏமாற்றிட மாற்றாக வருகிறார்கள்!
இவர்களை நம்பியது போதும் வெளியேறுங்கள்....
வெள்ளையரை வெளியேற்ற
அவர்கள் பொருட்களை புறக்கணித்தது இந்தியா...
இந்த கொள்ளையர்களை வெளியேற்ற
கட்சிகளைப் புறக்கணித்து வெளியேறுங்கள் !
புறக்கணிப்பதே புதிய போராட்டம்
அதுவே அறப்போராட்டம்...
அனைவரும் வெளியேறுவோம்
கொத்துக் கொத்தாய் வெளியேறுவோம்...
ஓபிசி உரிமைகளுக்காக
உரத்து முழங்குவோம்!
அருமை
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு