பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஏபிசி திட்டத் தொடக்க விழா

பட்டுக்கோட்டை, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் அதிக கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கான ஏபிசி திட்டத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது.


நகரைச் சுற்றியுள்ள கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் அதிகமாக படிக்கும் இந்தப் பள்ளியில் சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை வழங்குவதற்காக இந்தத் திட்டத்தை அறக்கட்டளை செயல்படுத்த உள்ளது.  


இப்பள்ளியில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் அடிப்படைத் தகுதிகளைப் பெறுவார்கள்.  


மேலும் இப்பள்ளியில் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மென் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, நூலகம் ஓர் ஆலயம் திட்ட போட்டிகள், கல்லூரி கனவு போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.  


பள்ளி தலைமை ஆசிரியர் சி. தெட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் உதவித் தலைமை ஆசிரியர் இ.குமரவேல், ஆசிரியர்கள் தனம், அல்ஃபினா ஆகியோர் கலந்து கொண்டனர்.  


சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கான ஆசிரியராக த.ஜாக்குலின் சகிலா பணியேற்றுக்கொண்டார். 


முன்னதாக திட்டத்தின் நோக்கங்கள் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் நா. வெங்கடேசன் விளக்கிக் கூறினார்.


நிறைவாக ஆசிரியர் தனம் நன்றி கூறினார்.









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா