ராயவரம் பள்ளியில் மென் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம் ராயவரம் சு. கதி. காந்தி உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் இரண்டு நாள் மென் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.
தன்னை அறிதல், தலைமை பண்பை வளர்த்துக் கொள்ளுதல், நேர்மையான வாழ்வியலை வழக்கமாக்கி கொள்ளுதல், நேர மேலாண்மை, இடர் களைதல், கூட்டு உழைப்பு, வலிமை அறிதல் போன்ற தலைப்புகளில் பயிற்றுனர் இளங்கோ முத்து பயிற்சி வழங்கினார். இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்தப் பயிற்சியை பள்ளித் தலைமை ஆசிரியர் இரா.கலைச்செல்வி தொடங்கி வைத்தார்.
அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் நா.வெங்கடேசன் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கம் அளித்தார்.
முன்னதாக அறக்கட்டளை ஆசிரியர் வித்தியா வரவேற்றார். பள்ளியின் ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர். பயிற்சி நிறைவில் மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிறைவாக ஆசிரியர் இந்திரா பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக