தவம்
இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் தமிழ்நாட்டின் குமரி முனையில் விவேகானந்தர் மண்டபத்தில் தவம் மேற்கொள்வதாகவும் மூன்று நாள் இடைவிடாத தவம் என்றும் கூறப்படுகிறது. பொதுவாகவே தவம் மேற்கொள்பவர்கள் அமைதியாக தான் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாத வகையில் மலைகளிலோ காடுகளிலோ குகைகளிலோ தவம் இருப்பார்கள் என்று அறிந்திருக்கிறோம். சமூக வெளிச்சம் கொண்டவர்கள் தங்களை மறைத்துக் கொண்டு யாரும் அறியாத வகையில் திருவண்ணாமலை, இமயமலை போன்ற பகுதிகளில் தவம் மேற்கொள்வதை தெரிந்திருக்கிறோம். புத்த, சமண துறவிகள் பசி மறந்து உறக்கம் மறந்து தவம் மேற்கொண்டு இயற்கையின் அரிய ஆற்றல்களை அறிந்து கொண்டதாக படித்திருக்கிறோம். ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு நடுவே பாறையின் மீது அமர்ந்து தவம் மேற்கொண்டார் சுவாமி விவேகானந்தர். அலைகளுக்குள் எழும் பேரும் அமைதியை அனுபவம் செய்தார் விவேகானந்தர். அவர் பாறையின் மீதமர்ந்து தவம் மேற்கொண்ட போது எந்த மண்டபங்களும் அங்கு இல்லை. அவர் தவம் மேற்கொள்வதை எந்த ஊடகங்களுக்கும் அவர் அறிவிக்கவும் இல்லை என்பதை வரலாற்றின் பக்கங்களில் இருந்து அறிந்து கொள்கிறோம் விளக்கு ஏற்றும் எண்ணெய், பத்தி, சூடம் போன