கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?
தேசத்தின் விடியலுக்கான தலையெழுத்தை எழுதிக் கொண்டிருக்கும் இவர்களின் வாழ்வு இருண்டு கிடக்கிறது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கல்லூரிகளில் பெயரளவில் கௌரவப் பணி. இவர்களுக்கு நிரந்தர பணி வாய்ப்பு என்பது கானல் நீராகவே கரைகிறது. தொகுப்பூதியம், 11 மாத கால ஒப்பந்த பணி, பெயர்தான் கௌரவப் பணி என்றாலும் பணியிடத்தில் நிரந்தரப் பணியாளர்களால் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது இதுதான் இவர்களின் இன்றைய நிலை. தமிழ்நாடு முழுவதும் 7,300 க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் அரசு கல்லூரிகளில் பணியாற்றி வருகிறார்கள். பல கல்லூரிகளில் பெரும்பான்மையாக கற்பித்தல் பணியோடு ஒட்டுமொத்த கல்லூரியில் இருக்கும் அனைத்து பணிகளையும் மேற்கொள்பவர்கள் இவர்கள்தான். துறைத்தலைவர்களே இல்லாமல் பல கல்லூரிகளில் இவர்களைக் கொண்டே துறைகள் இயங்கி வருகிறது. இவர்கள்தான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனாலும் இவர்களின் பணி, நிரந்தரம் செய்யப்படாமல் தற்காலிக பணியாகவே தொடர்கிறது. தற்காலிக பணியே இங்கு நிரந்தரமாகிவிட்டது என்பது வேதனைக்குரியதாக உள்ளது. கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்த