'ழ' பவுண்டேஷன் சார்பில் முன்னோடி விவசாயிக்கு விருது



பேராவூரணியில் வேளாண் துறை சார்ந்த பேரறிவோடு செயலாற்றி வரும் ஐயா ஆ.பழனிவேலு அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.


நிலவியல், நீர்நிலையில், வேளாண்துறை சார்ந்த அறிவியல் பார்வையோடு விவசாயம் செய்து வருபவர் ஐயா ஆ.ப. என்று அறியப்படும் திரு ஆ.பழனிவேலு.  


அரசு மற்றும் அரசுத்துறை நிர்வாகத்தோடு மக்களுக்கு பாலமாக திகழ்ந்து வருபவர்.  


தென்னை விவசாயம் சார்ந்த நிகழ்கால தேவைகள் குறித்து 20 ஆண்டுகளுக்கு முன்பே பேசியவர்.


மாவட்ட நிர்வாகம் முன்னெடுக்கும் மக்கள் குறைதீர் கூட்டங்களில் பொதுமக்களின் குரலாக நின்று உரிய தகவுகளோடு கோரிக்கைகளை முன்வைப்பவர்.


அரசின் பல்வேறு திட்டங்களை மக்கள் பயனுறும் வகையில் அதிகாரிகளிடம் விவாதித்து பெற்றுத் தருபவர். 


உள்ளாட்சி பதவிகள், அரசியல் ஈடுபாடு, அரசின் கௌரவ பதவிகள் என  பன்முகச் செயல்பாடுகளை கொண்டிருந்தாலும் தன்னை ஒரு விவசாயியாக அடையாளப்படுத்திக் கொள்வதையே பெருமையாக நினைப்பவர்.


மக்களும் அரசும் கொண்டாடி தீர்க்க வேண்டிய நல்மனிதர் ஐயா ஆ.ப.  


இவரின் சாதனையை இளம் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பேராவூரணி 'ழ' பவுண்டேஷன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் அவர்களின் தலைமையில் விழா எடுத்தது விருது வழங்கியது போற்றுதலுக்குரியது.


இந்நிகழ்வில் இயற்கை இடுபொருள் வேளாண்மையை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கான போட்டி அறிவிக்கப்பட்டது.  90 நாட்களில், வழங்கப்பட்ட விதைகளைக் கொண்டு அதிக மகசூல் உற்பத்தி செய்யும் விவசாயிக்கு பரிசு வழங்கப்படும் என்று ழ பவுண்டேஷன் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


வேளாண் துறையில் நிலைத்த தன்மையை ஏற்படுத்துவது, வேளாண் சார் வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துவது, வேளாண் துறையில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகப்படுத்துவது போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு 'ழ' பவுண்டேஷன் செயல்பட உள்ளதாக அமைப்பின் தலைவர் மருத்துவர் துரை.நீலகண்டன்  மற்றும் நிறுவனர் காக்கி அசோக்குமார் ஆகியோர் கூட்டாக குறிப்பிட்டனர்.  


பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னோடி விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வேளாண் துறை அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


வேளாண் துறையில், புதுமைகளை, புதுசெயல் வடிவங்களை, இயற்கையோடு இணைந்து செயல்படுத்த வேண்டியது காலத்தின் அவசியம்.  இதனைச் செயல்படுத்த முன்வந்துள்ள ழ பவுண்டேஷனுக்கு மெய்ச்சுடரின் அன்பும் வாழ்த்துக்களும்.








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா