கண்ணாடி மது பாட்டில்களால் வேளாண் நிலங்கள் சீரழிகிறது! மாற்று ஏற்பாடுகளைச் செய்யுங்கள்! - 'ழ' பவுண்டேஷன் விழாவில் கோரிக்கை.



பேராவூரணியில் ழ' பவுண்டேஷன் சார்பில் முன்னோடி விவசாயிக்கு பாராட்டு விழா மற்றும் விவசாயிகளுக்கான இயற்கை வேளாண்மை குறித்த போட்டிகள் அறிவிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.  


 சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சர் சிவ வி மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 'ழ' பவுண்டேஷன் சார்பில், "வேளாண் நிலங்களை மது பாட்டில்களில் இருந்து பாதுகாக்க வேண்டும், மது குடிப்பவர்கள் மது பாட்டில்களை உடைத்து வேளாண் நிலங்களில் வீசி எறிவதால் வேளாண் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் வேளாண் கூலித் தொழிலாளர்கள் தொழிலுக்கு வருவது குறைந்து வருகிறது.  எனவே மதுவை பாட்டிலில் அடைத்து விற்பதற்கு பதிலாக  டின்களில் அடைத்து விற்பனை செய்யும் மாற்று வழிகளை தமிழ்நாடு அரசு தேர்வு செய்ய வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இதற்கான முன்னெடுப்புகளை செய்ய முன்வர வேண்டும்", என்று கோரிக்கை வைக்கப்பட்டது.


முன்னதாக  அமைப்பின் சார்பில் வரவேற்புரை ஆற்றிய வழக்கறிஞர் குழ.செ. அருள் நம்பி இந்த கோரிக்கையை முன்வைத்து பேசினார்.  அவரின் பேச்சு பெரும் வரவேற்பை பெற்றது. 


வேளாண் நிலங்களை பாதுகாக்கும் வகையில் அரசு உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று மெய்ச்சுடர் சார்பிலும் கோரிக்கை வைக்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா