பேராவூரணியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
ஆலமரத்து விழுதுகள் அமைப்பு சார்பாக மேனாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு செங்கமங்கலம் சிவன் கோவில் வளாகத்தில் சிறுவர்களை கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
பசுமைச் சிந்தனையை பரப்பும் வகையில் இந்த முன்னெடுப்பை ஆலமரத்து விழுதுகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
முன்னதாக வளாகத்தை தூய்மை செய்யும் பணி சிறப்பாக நடைபெற்றது.
அப்துல் கலாம் பிறந்த நாளை மாணவர்களோடு கொண்டாடி மகிழ்ந்த ஆலமரத்து விழுதுகள் அமைப்புக்கு மெய்ச்சுடரின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக