குற்றவுணர்வு

 


அப்பா, பள்ளிக்கூடத்துல யாருமே இல்லப்பா!


ஏன்ம்மா... மிஸ் இருந்தாங்களே?


அதில்லப்பா நம்ம சாரு, நம்ம மிஸ் யாருமே இல்லப்பா!


இப்ப இருக்கிறவுங்களும் நம்ம சாரு, நம்ம மிஸ்சுதாம்மா!


போங்கப்பா!


இது எனது மகள் மகிழினி இரண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்த நாளில் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்.


மகிழினி என்ன செய்வாள்? மனமெல்லாம் இறுக்கமாக இருந்தவள் நாளாக நாளாக மாறிப்போனாள்.


நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி - நிரந்தர ஆசிரியர்கள் யாருமின்றி, நி​லையான தலைமை ஆசிரியர் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.


கடந்த ஆண்டு பணியாற்றிய தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிகளுக்குச் சென்றுவிட்டார்கள்.


தற்காலிக ஆசிரியர்கள், தலைமையின்றி அனுபவமின்றி புதிய புதிய கற்பித்தல் முறைகளில் பயிற்சியின்றி பணியாற்றி வருகிறார்கள்.


பெற்றோர்கள் ஏதேனும் ஆலோசனை வழங்கினாலும் "நெருக்கடி கொடுக்காதீர்கள்" என்கிறார்கள். 


"இப்பள்ளியில் பணியாற்ற யாருக்கும் விருப்பமில்லை, அதனால் எந்த ஆசிரியர்களும் இங்குப் பணியாற்ற வரவில்லை" என்கிறார்கள்.


சிக்கலே வேண்டாம் என்று மகிழினியை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டேன்.


மகிழினி ஏதோ சிந்தனையாக இருந்தாள்...


என்னம்மா?

ஒன்னுமில்லேப்பா!

என்ன யோசிக்கிறாய்?

அத்தலி, புத்தலி வெளயாண்டோமா...

யாரோடம்மா?

மஜிதாவோட...

எப்பம்மா?

கிழக்குப் பள்ளியில...


சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளது கண்களிலிருந்து சாரை சாரையாய் கொட்டுகிறது கண்ணீர்.


மகிழினி மாறிவிடுவாள்...

பள்ளிகளின் நிலை மாறுமா?


- ஆசிரியர்,


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா