பேராவூரணி பகுதி பள்ளிகளில் "ஏபிசி திட்டம்" சிறப்பு வகுப்பு தொடக்கம்



தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான "அகடமிக் பிரிட்ஜ் கோர்ஸ்" என்ற "ஏபிசி திட்டம்" சிறப்பு வகுப்புகள் பேராவூரணி அருகே குருவிக்கரம்பை மற்றும் செங்கமங்கலம் அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. 


அமெரிக்க வாழ் தமிழர்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது தமிழ்நாடு அறக்கட்டளை.  


இந்த அறக்கட்டளை மூலம் தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய பாடங்களில் அதிக கவனம் தேவைப்படும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு இந்தப் பாடங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. 


இந்த வகுப்புகளுக்காக அறக்கட்டளை சார்பில் தகுதியுள்ள ஆசிரியர்கள் தேவைக்கு ஏற்ப தலைமை ஆசிரியர் பரிந்துரையின் பெயரில் பள்ளிகளில் நியமிக்கப் படுகிறார்கள். 


மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் கலைத்திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு மென் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குவது, பெற்றோர்களை இழந்து வாடும் பிள்ளைகளின் கல்விச் செலவுகளை முழுவதுமாக ஏற்றுக் கொள்வது என கல்விசார் செயல்பாடுகளை செய்து வருகிறது தமிழ்நாடு அறக்கட்டளை.


தமிழ்நாட்டில் இதுவரை 28 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில்

குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் செங்கமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது.


"இந்தத் திட்டத்தினால் மாணவர்களின் திறன் மேம்படும் என்றும் கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் ஊக்கம் பெறும்" என்றனர் பள்ளி தலைமை ஆசிரியர்கள்.


தொடக்க விழா நிகழ்வில் பங்கேற்ற ஆசிரியர்கள்

" மெல்ல கற்கும் மாணவனாக இருந்து தன்னை உயர்த்தி கொண்டவர்கள் தான் இன்று பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். மாணவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும்" என்றனர்.

தமிழ்நாடு அறக்கட்டளையின் இந்தச் செயல்பாடு பள்ளிகளில் இடை நிற்கும் மாணவர்களை மீட்டெடுத்து உயர் கல்விக்கு வழி நடத்தும்.   அறக்கட்டளைக்கு மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.













கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா