உழைப்பிற்கு பதிலாக சூதாட்டத்தை மையப்படுத்தி இந்திய பொருளாதாரம் கட்டமைக்கப்படுகிறது 'மே' நாள் பொதுக் கூட்டத்தில் சி.மகேந்திரன் பேச்சு.

 


சேதுபாவாசத்திரம் பேராவூரணி ஒன்றியங்களைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மே தின பேரணி பொதுக்கூட்டம் பேராவூரணியில் நடைபெற்றது.


ஏ ஐ டி யு சி சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் கே எஸ் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும் தாமரை இலக்கிய இதழின் ஆசிரியருமான தோழர் சி.மகேந்திரன் சிறப்புரையாற்றினார்.


அவர் தனது உரையில்

"இந்திய பொருளாதாரம் சூதாட்டத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்படுகிறது.  


உழைப்பு மூலதனத்திற்கு பதிலாக நிதி மூலதனத்தை திரட்டுவதற்கு அரசு முனைப்பு காட்டி வருகிறது.


மே தின வெற்றி என்பது ஏதோ தேர்தல் வெற்றியைப் போன்றது அல்ல.  


எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கையோடு 25 லட்சம் பேர் கலந்து கொண்ட மாபெரும் போராட்டத்தில் 22 பேர் இறந்து போகிறார்கள், இந்தப் போராட்ட பின்னணி கொண்ட ஐந்து தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவர்களின் பெரும் தியாகத்திற்கு பிறகு உருவானது தான் மே தினம்.


இன்று 5 - 6 முதலாளிகளுக்காக அரசு நடத்தப்பட்டு வருகிறது.  


860 கோடியில் முகேஷ் அம்பானியின் வீடு கட்டப்பட்டுள்ள மாநிலத்தில் தான் 20 லட்சம் மக்கள் தெருவில் வசிக்கிறார்கள்.  


பண்டிதஜவர்களால் நேரு உருவாக்கிய ஐந்தாண்டு திட்டங்கள் மக்கள் சார்பு திட்டங்களாக அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் திட்டங்களாக இருந்தது.  


இந்திய பொருளாதாரம் உழைப்பு மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட  பொருளாதாரமாக இருந்தது.


ஆனால் இன்று சூதாட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் கட்டமைக்கப்படுகிறது.


இந்திய வளங்களான தாது மணல், ஸ்பெக்ட்ரம் போன்றவைகள் பெரு முதலாளிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது.  


இந்திய விடுதலைப் போராட்டம் ஈகம் நிறைந்தது.  விடுதலைக்காக போராடிய பகத்சிங்கிற்கு என்றுமே மரணம் இல்லை.  


அதுபோன்று உழைப்பாளர்களின் உரிமைகளுக்காக போராட முன் வர வேண்டும்.  மே தினம் என்பது கார்ப்பரேட்டுகளுக்கு எதிரானது.  கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான திட்டங்களை தொழிலாளர்கள் வகுக்க வேண்டும்.  


உண்மை தோற்காது, தியாகம் வீழ்ந்து போகாது இளைஞர்கள் தேசத்தைக் காக்க தேசத்தின் வளங்களை காக்க முன்வர வேண்டும்" என்றார்.


முன்னதாக விவசாய தொழிலாளர்கள் சங்க நகர பொறுப்பாளர் தோழர் எம்.சித்திரவேலு வரவேற்றார்.  முதுகாடு சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பொறுப்பாளர் வே. லட்சுமணன் நன்றி கூறினார்.


பேராவூரணி காந்தி பூங்கா அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.


கருத்துகள்

  1. பேராவூரணியில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது மகிழ்ச்சி அதை மெய்சுடர் பதிவு செய்வது காலத்தின் அவசியம், வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா