பேராவூரணி வணிக நிறுவனத்தில் உழைப்பாளர் நாள் கொண்டாட்டம்!



பேராவூரணி பகுதியில் உள்ளது நீவி பிராய்லர்ஸ். இந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து நேற்று மே 1 உழைப்பாளர் நாளினை கேக் வெட்டி கொண்டாடினர்.  


உழைக்கும் மக்களின் உயர்வை போற்றும் வகையில் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் மே ஒன்றாம் நாள் தொழிலாளர் நாள் கொண்டாடப்படுகிறது. உலகம் உழைப்பாளர்களால் இயங்குகிறது என்கிற தத்துவத்தை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதன் அடையாளமாக தொழிலாளர் ஒற்றுமைக்கான நாளாக மே ஒன்றாம் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  


தொழிலாளர் நலனை வலியுறுத்தும் பாட்டாளிகள் நாளை ஒவ்வொரு உழைப்பாளிகளும் பண்பாட்டு விழாவாக குடும்பத்தோடு கொண்டாட வேண்டும். தங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.  


தமிழ்நாட்டில் தொழிலாளர் நலனுக்கு எதிரான 12 மணி நேர வேலையை அனுமதிக்கும் தொழிலாளர் திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு மே 1 இல் விலக்கிக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. தொழிலாளர் சமூகம் ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் தொழிலாளர் நலனை மீறி எந்த சட்டத்தையும் எந்த அரசுகளாலும் நடைமுறைப்படுத்த முடியாது என்பதை இது மெய்ப்பித்திருக்கிறது.


உலகத் தொழிலாளர் நாளை தனது நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் தனது குடும்பத்தினரோடு கொண்டாடிய நீவி பிராய்லர்ஸ் தோழர் மணிகண்டனை வாழ்த்துகிறது மெய்ச்சுடர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா