மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற அமிழ் விளையாட்டுப் பள்ளி மாணவர்கள் வட்டாட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்



பேராவூரணி அருகே தனியார் பள்ளியில் நடை மட்டபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பேராவூரணி பகுதியில் பல்வேறு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகள் பங்கேற்று பதக்கங்களைத் தட்டிச் சென்றனர்.


குறிப்பாக தொடங்கி ஓர் ஆண்டுக்குள் 11 பதக்கங்களை வாரிக்குவித்தனர் அமிழ் விளையாட்டுப் பள்ளி மாணவர்கள். 


உடற்கல்வி ஆசிரியரும், சமூக செயற்பாட்டருமான தோழர் மருத. உதயகுமார் நடத்தி வரும் விளையாட்டு பள்ளி இது.  


கைபேசியை வைத்துக்கொண்டு, இருந்த இடத்தை விட்டு நகராமல் காணொளி விளையாட்டில் கட்டுண்டு கிடக்கும் சிறுவர்களை விளையாட்டு மைதானத்தை நோக்கி வரவழைத்த பெருமை இந்த அமிழ் விளையாட்டுப் பள்ளிக்கு உண்டு.


பேராவூரணி வட்டாட்சியர் வளாக விளையாட்டு மைதானத்தில் மழையர் பள்ளி மாணவர்கள் முதல் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வரை சுமார் 76 மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார் ஆசிரியர் உதயகுமார்.


தொடங்கிய ஓராண்டுக்குள் மாணவர்களிடம் பெரிய அளவில் விளையாட்டு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.  கீரமங்கலம், பேராவூரணி பகுதிகளில் நடைபெற்ற தொடரோட்டப் போட்டிகளில் இப்ப பயிற்சிப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.  


தற்பொழுது உடையநாடு ராஜராஜன் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டிகளில் இப்ப பயிற்சி பள்ளியில் இருந்து 27 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  விண்ணில் மிதக்கும் 27 விண்மீன்களைப் போல விளையாட்டு மைதானத்தில் இம்மானவர்கள் விண்மீன்களாய் ஒளிர்ந்தனர்.  இப் போட்டிகளில் பங்கேற்ற இவர்கள்  11 பதக்கங்களை சுருட்டினர்.


பதக்கங்களை தட்டிச் சென்ற மாணவர்கள் விவரம்.


 ஆதனூர் முதல் வகுப்பு படிக்கின்ற மாணவி விவேகா இன்ஃபெண்டினா த/பெ. முனைவர் கரம்சந்த் காந்தி இவர் 50 மீட்டர், 75 மீட்டர் போட்டியில் பங்கேற்று  இரண்டு போட்டிகளிலும் முதல் பரிசு பெற்று  2🥇🥇 தங்கப் பதக்கம் வென்றார்.


 முடப்புளிக்காடு இரண்டாம் வகுப்பு மாணவன் அதிவர்மன் த/பெ. இளையராஜா.

இவர்  பந்து எறிதல் போட்டியில் இரண்டாம் இடமும் 75 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் மூன்றாம் இடமும் பெற்று 1 வெள்ளிப் பதக்கம் 1  வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.


பேராவூரணி அண்ணாநகர் இரண்டாம் வகுப்பு மாணவர் ரிஷ்வா த/பெ. ஓட்டுநர் மோகன்.  இவர் பந்தெறியும் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து சான்றிதழும் வெண்கல பதக்கம்🥉 வென்றுள்ளார்.


பேராவூரணி அண்ணாநகர் மூன்றாம் வகுப்பு மாணவன் நாகபாலன் த/பெ. வீரமணி.  இவர்  பந்தெறியும் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சான்றிதழும் வெள்ளி பதக்கமும்🥈 வென்றுள்ளார்.*


நாட்டாணிக்கோட்டை ஐந்தாம் வகுப்பு மாணவன் அப்துல் முபின் த/பெ. இப்ராமுஸா. இவர்  பந்தெறியும் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சான்றிதழும் வெள்ளி பதக்கமும்🥈 வென்றுள்ளார்.


பேராவூரணி முடப்புளிக்காடு ஐந்தாம் வகுப்பு மாணவி சுபஸ்ரீ த/பெ. இளையராஜா.  இவர் பந்தெறியும் போட்டியில்  மூன்றாம் இடம் பெற்று சான்றிதழும் வெண்கல பதக்கமும்🥉 வென்றுள்ளார்.


நாட்டாணிக்கோட்டை ஆசிரியர் குடியிருப்பு வளாகம் ஒன்பதாம் வகுப்பு மாணவி தமிழிசை த/பெ. ஆசிரியர் காமராஜ் இவர்  100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் பங்கேற்று மூன்றாம் இடம் பெற்று இரண்டு வெங்கல பதக்கங்களை 🥉🥉தட்டிச் சென்றார்.


பேராவூரணி நீலகண்டபுரம் எட்டாம் வகுப்பு மாணவன் நிகாஸ் த/பெ. செந்தில்குமார்.  இவர் குண்டெறிதல் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெங்கல பதக்கத்தை 🥉 தட்டிச் சென்றார்.

வெற்றி பெற்ற மாணவர்கள் பேராவூரணி வட்டாட்சியர் த. சுகுமார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  

விளையாட்டு ஆசிரியருக்கும் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெய்ச்சுடரின் வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா