ஒளி! விழி!
அகவை அதிகமாக அதிகமாக அனுபவம் அதிகமாகும். உள்ளுக்குள் அனுபவம் தரும் வெளிச்சம் விழிகளில் மங்கத் தொடங்கும். பேராவூரணி பாரத ஸ்டேட் வங்கி ஆதரவோடு அரிமா சங்கம் நடத்தும் விழிகளில் ஒளியேற்றும் விழா மருத்துவ முகாமாக பேராவூரணியில் நடைபெற்று வருகிறது. விநாயகா திருமண அரங்கில் நடைபெறும் இந்த மருத்துவ முகாமை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை முன் நின்று நடத்தியுள்ளது. பேராவூரணி ஆசிரியர் ராமநாதன் அவர்கள் தலைமையிலான அரிமா சங்கத்திற்கும் பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் ஐயா ராகவன் சூரியேந்திரன் உள்ளிட்ட வங்கி நிர்வாகத்திற்கும் மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். விழிகளுக்கு ஒளி கொடுப்போம் இருளுக்கு விடை கொடுப்போம்! பார்வை குறைபாடு உள்ளவர்கள் குணம் பெற வாய்ப்பளித்த அரிமா சங்கமும் பாரத ஸ்டேட் வங்கியும் போற்றுதலுக்குரியது.