பந்தய சைக்கிள் வாங்க முடியாமல் தவிக்கும் மாணவன்
சைக்கிள் பந்தயத்தில் மாவட்ட அளவில் முதலிடம்! மாநிலப் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தும் சைக்கிள் இல்லாமல் தவிக்கும் பேராவூரணி அரசு பள்ளி மாணவர்!
------
இன்பன் கார்த்திக், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர். பாபநாசத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் பந்தயத்தில் முதலிடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்து இருக்கிறார்.
சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்ட இன்பன் கார்த்திக், சுயமாகவே பயிற்சி எடுத்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுதே மாவட்ட அளவில் நடத்தப்பட்ட சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்டு மூன்றாவது இடம் பெற்றவர்.
இவரின் ஆர்வத்தை கண்ட பள்ளி ஆசிரியர்கள் முறையான பயிற்சி மேற்கொள்ள வழிகாட்டி உள்ளனர்.
தற்பொழுது மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற இன்பன் கார்த்திக், தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் மாநில அளவிலான சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ளார்.
எளிய குடும்பத்தில் பிறந்து சுயமாக சைக்கிளிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பயிற்சி மேற்கொண்டு வரும் இன்பன் கார்த்திக் மாநில அளவில் நடத்தப்படும் போட்டியில் கலந்து கொள்ள சைக்கிள் இல்லாமல் தவிக்கிறார்.
சாதாரண சைக்கிள் கொண்டே மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இவர் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள சைக்கிள் பந்தயத்திற்கு என்றே தயாரிக்கப்படும் பிரத்தியேக சைக்கிளில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
2022 நவம்பர் 17 லில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் இவர் கலந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்குள் சைக்கிளிங் பந்தயத்திற்கான சைக்கிள் இருந்தால்தான் பங்கேற்க முடியும்.
பந்தயங்களுக்கான சைக்கிளின் விலையோ சுமார் 85 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரைக்கும் இருப்பதாக கூறுகிறார்கள்.
இவ்வளவு தொகைக்கு இந்த மாணவர் எங்கு செல்வார்?
மாவட்ட அளவில் சாதனை செய்த மாணவர் மாநில போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளார்.
அரசோ, பெரு நிறுவனங்களோ, விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்ட அமைப்போ, நல்லுள்ளம் கொண்ட புரவலர்களோ உதவி செய்தால் மட்டுமே மாநில போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு மாணவனுக்கு கிட்டும்.
இந்த மாணவருக்கு உதவும் நோக்கத்தில் கரம் ஏந்தி நிற்கிறது மெய்ச்சுடர்.
9842609980
கருத்துகள்
கருத்துரையிடுக