வாழ்த்துக்கள் சாம்பவி

வாழ்த்துக்கள் சாம்பவி




நாடாகாடு பாக்கியலட்சுமி -  திருநீலகண்டன் இவர்களின் மகள் சாம்பவி, இவருக்கு பதினொரு வயது.  


நோய்தொற்று பேரிடர் காலத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பெருநிறுவனங்கள் நிதி படைத்தோர் வாரி வழங்குங்கள் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கை தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பரப்பப்பட்டுவருகிறது.


தொலைக்காட்சி வாயிலாக முதலமைச்சரின் இந்த கோரிக்கையை கண்ணுற்றார் மாணவி சாம்பவி.


ஏழை எளிய மக்களின் துயர் துடைக்க நோய்த் தொற்றில் இருந்து விடுபட அரசின் இந்த முயற்சிக்கு உதவிட நினைத்தார்.


மறைந்த தனது தந்தையின் நினைவு நாளில் ஆதரவற்ற மக்களுக்கு உணவு அளிப்பதற்காக தான் சேர்த்து வைத்த 8300 ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதற்கான  விருப்பத்தை தனது தாயிடம் கூறினார். 


 மகள் சாம்பவியை உச்சி முகர்ந்து அவரது ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் தாய் பாக்கியலட்சுமி.


மாவட்ட ஆட்சியரிடம் இந்தத் தொகையை வழங்கியிருக்கிறார் சாம்பவி.


இவரின் இச்செயலை பாராட்டி சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாவட்ட அதிகாரிகள் நேரில் சென்று பாராட்டி வருகிறார்கள்.  


மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் மாணவியின் இல்லத்திற்கு சென்று புத்தகங்கள் வழங்கி பாராட்டினார்.


மாணவி சம்பவிக்கு மெய்ச்சுடர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.  குழந்தைக்கு கொடுக்கும் பண்பை வளர்த்த இவரின் தாயார் பாக்கியலட்சுமி அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா