தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
தோழர் ஆறு. நீலகண்டன் அவர்களின் முகநூல் பதிவை படித்ததிலிருந்து மிக உயரத்தில் வைத்துப் போற்றக் கூடியவர்களாக மாறிப்போனார்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தோழர்கள்.
பெரும் தொற்றினால் இறந்த உடல்கள் கங்கை நதிக்கரையில் வீசப்படுகிறது...
பெரும் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்கள் மரித்துப் போனால் மனிதநேயமும் மரித்துப் போகிறது. அறம் மறந்த அச்சம் சூழ்ந்து கொள்கிறது. சகோதரத்துவம் செத்து மடிகிறது.
இறப்பினை விடக் கொடூரமானது வாழ்ந்த மனிதர்களின் உடல்களை அனாதையாக விட்டு விடுவது.
இந்த நிலையில்தான் பெரும் தொற்று பாதிப்பினால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியை பொறுப்போடு செய்து வருகிறார்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தோழர்கள்.
இறைவனின் திருப்பெயரால் என்ற வாசகத்தை தாங்கிக்கொண்டு
குழு மனப்பான்மையுடன், பாதுகாப்பு உடைகள் அணிந்து, இறந்தவர்களின் இல்லத்தில் உள்ளவர்களைத் தேற்றி இறுதிச்சடங்கு நிகழ்வுகளை நிகழ்த்திவரும் இவர்களை என்ன பாராட்டினாலும் தகும்.
பிறர் துயரை தம் துயர் போல் பார்த்து தம் அறிவாற்றலை அவர் துயர் துடைக்க பயன்படுத்துவதே உண்மை அறிவு என்கிறார் வள்ளுவர்...
மக்களின் துயர் துடைக்கும் பணியில் அறிவாற்றலுடன் செயல்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தோழர்கள் செயல்பாடுகள் எப்பொழுதெல்லாம் சமூகம் பேரழிவை சந்தித்து வருகிறதோ அந்த நிமிடத்தில் இருந்து தொடங்கிவிடுகிறது...
சென்னை பெருவெள்ளம்,
கஜா புயல் காலங்களில் மட்டுமல்ல தனிமனிதர்களின் உதிர தேவைகளுக்காக கூட உங்களைத்தான் நாடுகிறது இந்த நாடு...
தமிழ் போற்றும் அறம் காக்க சிறப்பாக செயல்படும் தவ்ஹீத் ஜமாத் தோழர்களுக்கு மெய்ச்சுடரின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..
கருத்துகள்
கருத்துரையிடுக