உணவு வங்கி
கொரோனா நோய்தொற்று ஊரெல்லாம் உயிர் பலி வாங்கி வருகிறது. அதைவிட கொடுந்துயர் உணவின்றி தவிக்கும் நிலை.
பசித்தவர் ஒவ்வொருவரையும் பார்த்து உணவு பரிமாற ஏற்ற காலமாகவும் இது இல்லை.
அதனால்...
ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் பணியை எளிமை ஆக்கியிருக்கிறார்கள் மனோரா லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள்..
பொது இடத்தில் உணவு பொட்டலங்களை அடுக்கி வைத்துவிட்டு, பசித்தவர் எடுத்துச் செல்லுங்கள் என்று எழுதி வைத்திருப்பது எளியவர்களை பசியார வைத்திருக்கிறது.
இதுகுறித்து இந்த சங்கத்தின் பொறுப்பாளர் நிமல் ராகவன் குறிப்பிட்டதாவது...
"நாங்கள் பொது இடத்தில் உணவு பொட்டலங்களை அடிக்கி வைத்து விடுகிறோம் பசித்தவர்கள் யார் வேண்டுமானாலும் எடுத்து பசியாறலாம்.
அதேபோல் உணவு வழங்க விருப்பம் உள்ளவர்களும் எங்களை தொடர்பு கொண்டால் உணவைப் பெற்று தேவைப்படும் இடங்களில் உணவு மையங்களை ஏற்படுத்தி விடுவோம்.
ஒரு உணவு வங்கியைப் போல செயல்பட்டு வறியவர்களின் வயிற்றுப் பசியை போக்குவதே எங்கள் நோக்கம்" என்றார்.
பேராவூரணி ரயில் நிலையம் எதிரில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த உணவு வழங்கும் முயற்சி படிப்படியாக திருச்சிற்றம்பலம் சேதுபாவாசத்திரம் போன்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள் இந்த சங்கத்தினர்.
உணவு வழங்க விருப்பம் உள்ளவர்களும் மனோரா லைன்ஸ் சங்க பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக