வாழ்த்துச் சொல்வோம்...
வாழ்த்துச் சொல்வோம்... பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யின் முகப்புச் சுற்றுச்சுவரை சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நெடுஞ்சாலை துறையினர் இடித்து விட்டனர். இந்நிலையில் சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பு இல்லாத சூழலில் பள்ளி செயல்பட்டு வந்தது. வெளிநபர்கள் பள்ளியின் கழிவறைகளை முறையற்ற முறையில் பயன்படுத்தி வந்தனர். நகரின் மையப் பகுதியில் உள்ள பள்ளி என்பதால் ஒவ்வொரு நாளும் ஆசிரியர்களும் மாணவர்களும் கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒருநாள் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி வகுப்பு நேரத்தில் கழிவறை செல்வதாக கூறிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்து சாலையை பார்த்து இருக்கிறார். சாலையில் அந்த மாணவியின் உறவினர் யாரோ ஒருவர் நடந்து செல்வதைப் பார்த்து, விவரம் அறியா அந்தக் குழந்தை அந்த உறவினரை பார்த்துக்கொண்டே பெரியார் சிலை வரை சென்று விட்டார். ஆசிரியர்கள் உடனடியாக கவனித்து அந்த மாணவியை மீட்டு வந்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் இந்த செய்தியை கேள்விப்பட்ட செந்தில் ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் க.நீலகண்டன் அவர்கள் பதறிப்போய் உடனடியாக பள்ளிக்கு ஒரு தற்காலிக கம்பி வே