வாழ்த்துச் சொல்வோம்...
வாழ்த்துச் சொல்வோம்...
பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யின் முகப்புச் சுற்றுச்சுவரை சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நெடுஞ்சாலை துறையினர் இடித்து விட்டனர்.
இந்நிலையில் சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பு இல்லாத சூழலில் பள்ளி செயல்பட்டு வந்தது.
வெளிநபர்கள் பள்ளியின் கழிவறைகளை முறையற்ற முறையில் பயன்படுத்தி வந்தனர்.
நகரின் மையப் பகுதியில் உள்ள பள்ளி என்பதால் ஒவ்வொரு நாளும் ஆசிரியர்களும் மாணவர்களும் கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒருநாள் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி வகுப்பு நேரத்தில் கழிவறை செல்வதாக கூறிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்து சாலையை பார்த்து இருக்கிறார். சாலையில் அந்த மாணவியின் உறவினர் யாரோ ஒருவர் நடந்து செல்வதைப் பார்த்து, விவரம் அறியா அந்தக் குழந்தை அந்த உறவினரை பார்த்துக்கொண்டே பெரியார் சிலை வரை சென்று விட்டார். ஆசிரியர்கள் உடனடியாக கவனித்து அந்த மாணவியை மீட்டு வந்தனர்.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் இந்த செய்தியை கேள்விப்பட்ட செந்தில் ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் க.நீலகண்டன் அவர்கள் பதறிப்போய் உடனடியாக பள்ளிக்கு ஒரு தற்காலிக கம்பி வேலி அமைத்துக் கொடுத்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கஜா புயலால் சீரழிந்து கிடந்த பள்ளி வளாகத்தை, அழகுபடுத்த பள்ளி சுவர்களுக்கு பல வண்ண ஓவியம் வரைய உதவியவர் நீலகண்டன். தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சியில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார்.
கோடி கோடியாய் சேர்த்து வைத்திருந்தாலும் கொடை என்று யாரும் கேட்டு வந்தால், யாரும் அழைக்காமலேயே கைபேசியை காதில் வைத்துக்கொண்டு அவசரமாக கிளம்பி விடுகிறார்கள் பலர்....
ஆனால் கேள்வியுற்றதுமே கொடுக்கும் மனது கொண்டு செயலாற்றி இருக்கும் நீலகண்டன் அவர்களை நெஞ்சார வாழ்த்துவோம்.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
(பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தனது தொகுதி வளர்ச்சி நிதியின் முதல் பணியாக பேராவூரணி கிழக்குப் பள்ளிக்கு நிரந்தரமாக பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து, நூற்றாண்டு அலங்கார வளைவும் அமைத்துத் தருவதாக உறுதியளித்திருக்கிறார்)
க.நீலகண்டன் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்ல...
9788039142
வாழ்த்துக்கள் திரு.நீலகண்டன்.
பதிலளிநீக்குநல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை”