பேராவூரணி பகுதிக்கு போக்குவரத்து வசதி செய்துதரக் கோரிக்கை
பேராவூரணி பகுதிக்கு போக்குவரத்து வசதி செய்துதரக் கோரிக்கை
மக்களைத் தேடி முதல்வர் - பேராவூரணி சிறப்பு முகாமில் தமிழ்நாடு கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் தமிழ்வழிக் கல்வி இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கோரிக்கை விண்ணப்பம் வழங்கப்பட்டது. அவர்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-
பேராவூரணி வட்டார பொதுமக்கள் உரிய போக்குவரத்து வசதியின்றி இரவு நேரங்களில், வெளியூரிலிருந்து வரவும் வெளியூர்களுக்குச் செல்லவும் முடியாத நிலை உள்ளது.
கிராமப்புற பகுதிகளுக்கு பகல் நேரத்திலும் போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.
இதன்காரணமாக தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, காரைக்குடி, மதுரை போன்ற நகரங்களுக்கு மருத்துவம் சார்ந்த தேவைகளுக்காக பொதுமக்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தனியார் வாகனங்களை அதிக வாடகைக்கு அமர்த்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. பலர் வசதியின்மை காரணமாக உயிரழக்கும் நிலையும் ஏற்படுகிறது.
வெளியூருக்கு பணிக்குச் செல்பவர்கள் உரிய நேரத்தில் பணிக்குச் செல்லமுடியவில்லை,
தொழில் காரணமாக வெளியூருக்கு பயனிப்பவர்கள் உரிய நேரத்தில் ஊர்திரும்ப முடியாமல் இன்னலுரும் நிலையில் உள்ளனர்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்து வசதியின்றி குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியுறும் நிலை உள்ளது.
பேராவூரணி அரசுக் கல்லூரிக்கு பேருந்து இயக்கப்பட வேண்டும். சுமார் 1200 மாணவர்கள் படிக்கும் இந்தக் கல்லூரி பேராவூரணியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. பேருந்து வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் நடந்தே சென்று வருகிறார்கள். ஒரே ஒரு தனியார் சிற்றுந்து வாகனத்தில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தித்தில் பயணித்து வரும் அவலநிலை உள்ளது.
குறிப்பாக பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி மார்க்கத்தில் இயங்கும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஒன்று கூட பேராவூரணி வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை.
அனைத்துப் பேருந்துகளும் பட்டுக்கோட்டை - துறவிக்காடு - திருச்சிற்றம்பலம் - ஆவணம் - கீரமங்கலம் - அறந்தாங்கி வழித்தடத்திலேயே இயங்குகிறது.
அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து அந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
பட்டுக்கோட்டை - அறந்தாங்கி போக்குவரத்தை பேராவூரணி வழித்தடத்தில் இயக்குவதும் திருச்சிற்றம்பலம் வழித்தடத்தில் இயக்குவதும் ஒரே பயன நேரத்தையும் - தொலைவையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி வழியாக காரைக்குடி, மதுரை செல்லும் பேருந்துகளில் 50% பேருந்துகளை மட்டுமாவது பேராவூரணி வழித்தடத்தில் இயக்கினால் பேராவூரணி பகுதி போக்குவரத்து வசதியைப் பெறும்.
எனவே மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுகிறோம்.
மேலும் பேராவூரணி பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை போன்ற தொழில் நகரங்களுக்கு தொழிலாளர்கள் நலன் கருதி நேரடி பேருந்து சேவையை இரவு மற்றும் பகல் நேரங்களில் இயக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள் சார்பில் வழங்ப்பட்ட இந்த விண்ணப்பத்தை தமிழ்வழிக் கல்வி இயக்கம் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், த.பழனிவேல், பாரதி ந.அமரேந்திரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகம் ஆறு. நீலகண்டன், திராவிடர் விடுதலைக் கழகம் சித.திருவேங்கடம், மருத. உதயகுமார், பேராவூரணி திருக்குறள் பேரவை கொன்றை செ.சண்முகம் ஆகியோர் வழங்கினர்
சிறந்த கோரிக்கை தோழர், பேருந்து வசதியில் நாம் மிகவும் பின் தங்கியுள்ளோம்... கோரிக்கை வெல்ல வாழ்த்துகிறேன்
பதிலளிநீக்கு