தொல்காப்பியம் தமிழரின் பெருமை - தமிழ்வழிக் கல்வி இயக்கக் கொள்கை விளக்கக்கூட்டத்தில் பேராசிரியர் கணேஷ்குமார் உரை.
தொல்காப்பியம் தமிழரின் பெருமை - தமிழ்வழிக் கல்வி இயக்கக் கொள்கை விளக்கக்கூட்டத்தில் பேராசிரியர் கணேஷ்குமார் உரை.
அவர் தமது உரையில்,"கல்வியை ஒன்றியப் பட்டியிலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குள் கொண்டுவர அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை அனைத்தும் தமிழ் வழியில் நடைபெற வேண்டும். தமிழ்வழியில் கல்வியை வழங்காமல், தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது பொருளற்றதாகிவிடும். எனவே அனைத்து துறைக் கல்விையும் தமிழ் வழியில் வழங்க அரசு முனைப்புகாட்ட வேண்டும். அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி வழங்குவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். கல்வி மொழி, வேலை மொழி, தொடர்பு மொழி, அறமன்ற மொழி, ஆட்சி மொழி, அலுவல் மொழி, வழிபாட்டு மொழி என அனைத்திலும் தமிழ் என்ற நிலையை எட்ட தொடர்ந்து தமிழ்வழிக் கல்வி இயக்கம் செயல்படும்" என்றார்.
நிகழ்வில் பேராசிரியர் முனைவர் ச.கணேஷ்குமார் 'தொல்காப்பியம் தமிழரின் பெருமை' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அவர் தமது உரையில், "உலகில் கிடைக்கப்பெற்ற முதல் நூல் தொல்காப்பியம். இது தமிழரின் பெருமைக்கு சான்றாக அமைகிறது. இந்நூல் மொழிக்கு மட்டுமன்றி வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்துத் தந்துள்ளது. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகட்கு முன்பே தமிழுக்கு இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது என்றால் நமது மொழியில் இந்நூலுக்கு முன்பே பல்வேறு இலக்கிய நுல்கள் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது நன்கு உணரத்தக்கது. இலக்கிய வளத்தோடு அறம் போற்றும் மனிதர்களாகவும் தமிழர்கள் வழ்ந்துள்ளனர் என்பதற்கும் தொல்காப்பியமே சான்று. தமிழர்களிடம் பொய்யும் களவும் புகுந்த காலத்தில் அதை சரிசெய்ய சட்டம் இயற்றிய பெருமைக்குரியது தொல்காப்பியம். எழுத்து, சொல், பொருள் என 1610 விதிகளை மொழிக்கும், வாழ்வியலுக்கும் வகுத்துத்தந்துள்ளது இந்த நூல். எழுத்து, சொல், பொருள் என ஒவ்வொன்றிற்கும் ஒன்பது இயல்களை அமைத்து மொத்தம் 27 இயல்களைக் கொண்டுள்ளது தொல்காப்பியம். தமிழ் மரபாகவும், தமிழர்களின் மரபாகவும் இன்றும் உலகம் கொண்டாடும் இலக்கண நூல் தொல்காப்பியம். இதை தமிழர்கள் கற்றறிய வேண்டும்" என்றார்.
இவ்வாண்டுக்கான தமிழ்நாட்டு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் அ.காஜாமுகைதீன், செ.இராமநாதன் ஆகியோர் நிகழ்வில் பாரட்டப்பெற்றனர்.
முன்னதாக இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் த.பழனிவேல் வரவேற்றார், ஒன்றியப் பொறுப்பாளர் செ.சிவக்குமார் நன்றி கூறினார்.
வாழ்த்துக்கள் தம்பி
பதிலளிநீக்கு