இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிலிர்க்கச் செய்யும் சிலம்பம்

படம்
 தமிழ்நாட்டில் மிக பாரம்பரியமான கலையான சிலம்பக்கலை தற்பொழுது மீண்டும் பரவத் தொடங்கி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிலம்பம் கற்றவர்கள் மிக குறைவாகவே இருந்தார்கள்.  ஆனால் தற்பொழுது  இந்தக் கலையை கற்றுக் கொள்வதற்கான ஆர்வமும் உரிய பயிற்சியும் கிராமங்கள் வரை எட்டி இருக்கிறது. இந்த காணொளியை காணுங்கள் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திற்குள் பயிற்சி மேற்கொண்டு  இந்தச் சிறுவர்கள் கைகளில் சுற்றிச்சூழலும் சிலம்பம் காண்பவர்களை சிலிர்க்கச் செய்கிறது.

வழக்கொழிக்க நினைப்பவர்கள் வளர்க்க மாட்டார்கள்

படம்
வழக்கொழிக்க நினைப்பவர்கள் வளர்க்க மாட்டார்கள் ---------------- "நற்றமிழால் என்னைப் பாடு" என்று பக்தி இலக்கியங்களால் போற்றப்பட்டது தமிழ்! "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்து உள்ளார்" என்று பொருள் உணர்ந்து மக்கள் மொழியான தமிழில் பாடும் பண்பாட்டை வளர்த்தது பக்தி இலக்கியம். கிளைத்தது எல்லாம் தமிழில் இருந்து தான் என்றாலும் கிளைகளால் மரத்துக்கு ஆபத்து வரா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது தாய் தமிழ் உறவுகளின் கடமையாகும். அதுதான் கிளைகளுக்கும் நல்லது. வழக்கொழிந்து போவதே இறப்புக்கு சமமானது. மக்கள் பயன்பாட்டில் இருந்து மக்கள் மொழியை அழித்தொழித்து அந்த மொழியை போற்றுவதும் புகழ்வதும் திவசம் செய்வதற்கு சமமாகும். புகழ்வது போல இகழ்வது எப்படி என்பதை தமிழ் தான் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. தமிழ் தன்னகத்தே சேர்த்து வைத்திருக்கும் பல்லாயிரம் ஆண்டு அறிவு அதுதான். தமிழைப் (எங்களை) புகழ்வது கூட எங்களை அழித்துவிட எடுக்கும் அரவணைப்பு என்பதை எங்கள் மொழி எங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. "தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்த

பேராவூரணி மாணவி வெண்கல பதக்கம் வென்றார்

படம்
தேசிய அளவிலான இரட்டைச் சிலம்பம் போட்டியில் பேராவூரணி மாணவி வெண்கல பதக்கம் வென்றார் --------------- பேராவூரணி புதுச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் குணாலி. இவரின் பெற்றோர் கோமதி - சரவணன். குணாலி சிறுவயதில் இருந்தே விளையாட்டில் படுச்சுட்டி. பேராவூரணி போன்ற சிறு நகரங்களில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் பெண்களுக்கு பெரும்பாலும் மறுக்கப்பட்டே வந்திருக்கிறது.   ஆனால் குணாலியின் விருப்பத்தை புரிந்து கொண்ட இவரின் பெற்றோர்கள் குணாலி சிலம்பம் கற்றுக் கொள்ள உரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தனர்.   கால்களில் சிலம்பு அணிந்து கொண்டு பரதநாட்டியம் ஆடுவதையே பெருமையாக கருதிக் கொள்ளும் பெண்ணிய சிந்தனை சமூகத்தில் சிலம்பம் கற்றுக்கொள்ள தனி ஒரு பெண்ணாக சென்றார் குணாலி.  "எட்டும் அறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை கணென்று கும்மியடி!" என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் இரட்டைச் சிலம்ப பயிற்சி மேற்கொண்டு இந்திய அளவில் 2000 பேர் கலந்து கொண்ட போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றிருக்கிறார் குணாலி.  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியை தமிழ்நாடு சிலம்ப விளையாட்டு கழ

அரிமா சங்கம் உதவியுடன் பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொலைக்காட்சி காணொளி மூலம் கற்றல் செயல்முறை

படம்
கல்வித் தொலைக்காட்சி மற்றும் கல்விச் செயலிகள் மூலம் கற்றல் நடைமுறை மாணவர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. செயல்வழி கற்றலுக்கு இணையாக காட்சிகள் வழியாக கற்றல் முறை கற்பித்தலை எளிமைப்படுத்தி இருக்கிறது. இணையம் உலகளாவிய கற்றல் மற்றும் கற்பித்தல் வாய்ப்புகளை குவித்து வருகிறது. இணையத் தொடர்புடன் கூடிய தொலைக்காட்சி இவற்றை எளிதில் சாத்தியப்படுத்தி விடுகிறது. ஒரு அரசுப் பள்ளியில் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு இணையத் தொடர்புடன் கூடிய தொலைக்காட்சி பெரும் துணையாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு வேண்டுகோளுக்கு இணங்க அரிமா சங்கம் பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இணையம் பயன்படுத்தும் வகை கொண்ட வண்ணத் தொலைக்காட்சி வசதியை செய்து கொடுத்திருக்கிறது. லயன்ஸ் சங்க தலைவர் ஆசிரியர் இராமநாதன் உள்ளிட்ட ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும், இந்த வசதியை இப்பள்ளியில் மேம்படுத்துவதற்கு துணை நின்ற லயன் பிரவீன் ஆனந்தன் உள்ளிட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். பகிர்

பள்ளி வளாகங்களை பளிச்சிட வைக்கும் வி.எஸ்.வி. ராகவன் கல்வி அறக்கட்டளை

படம்
பள்ளி வளாகங்களை பளிச்சிட வைக்கும் வி.எஸ்.வி. ராகவன் கல்வி அறக்கட்டளை வெளுத்துப்போன சுவர், சொட்டை சொட்டையாய் பொறிந்து கொட்டிப் போன கரும்பலகை, அழுக்கை அப்பிக்கொண்ட அரசுப் பள்ளி கட்டமைப்பை அழகுப்படுத்தும் நோக்கில் செயல்பட தொடங்கி இருக்கிறது வி.எஸ்.வி.ராகவன் கல்வி அறக்கட்டளை. பெரும் விளையாட்டு வீரரான வி.எஸ்.வி.ராகவன் அவர்கள் பெயரில் இந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறார் நிமல் ராகவன். நீர்நிலை மேம்பாட்டுக்காக தொடர்ந்து செயலாற்றி வரும் சமூக செயற்பாட்டாளரான நிமல் ராகவன் கையில் எடுத்திருக்கும் அடுத்த செயல்திட்டம் பள்ளி வளாகங்களை பளிச்சிட வைப்பது. பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்த அமைப்பு சார்பில் பள்ளி சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. ஓவியர் மணிகண்டன் தனது கற்பனைகளால் வளாகத்தை வண்ணமயமாக மாற்றி வருகிறார். பொறியியல் பட்டதாரியான இவர் குருவிக்கரம்பை பகுதியைச் சேர்ந்தவர். காண்பவர் கண்களைக் கவரும் வகையில் மிக நேர்த்தியாக தனது கை வண்ணத்தைக் காட்டி வருகிறார். இவர் வரைந்து வரும் ஓவியங்கள் மாணவர்களிடம் தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உருவாக்கி இருக்கிறது.

கஜா புயல் உருவாக்கிய காயங்களை ஆற்றும் பணியில் தன்னார்வலர்கள்

படம்
கஜா புயல் உருவாக்கிய காயங்களை ஆற்றும் பணியில் தன்னார்வலர்கள் கஜா புயல் பேராவூரணி பகுதியை தாக்கி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் அந்தப் புயல் உருவாக்கிய காயங்கள் இன்னும் ஆறவில்லை. 20 ஆண்டுகளுக்கு பேராவூரணி பகுதியை பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டது இந்த புயல். பசுமை போர்த்திய பல பகுதிகள் இன்று பொட்டல்காடாக மாறி உள்ளது. மீண்டும் பேராவூரணி பகுதியை பசுமையாக மாற்ற தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள் தன்னார்வலர்கள். கஜா புயல் தாக்கிய காலங்களில் வீடுகளை இழந்து உணவின்றி தவித்து வந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த தன்னார்வலர்கள் கூட்டம் தொடர்ந்து இப்பகுதிகளில் மரம் நடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கஜாவை தொடர்ந்து கொரோனா பெருந் தொற்று காலத்திலும் எளியவர்களுக்கு உதவும் தொண்டறத்தை மேற்கொண்டனர் இந்த தன்னார்வலர்கள். கஜா தாக்கி நான்காண்டு நிறைவில் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு நற்பணியில் ஈடுபட்டனர். இவர்களோடு இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு மகிழ்ந்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஐயா முதல்வன். தங்களுக்கென்று தலைமை கிடையாது. பத

குரூப் 2 - முதல் நிலைத் தேர்வில் திருவள்ளுவர் போட்டி தேர்வு பயிற்சிக் கூடத்தின் மாணவர்கள் தேர்வு

படம்
குரூப் 2 - முதல் நிலைத் தேர்வில் திருவள்ளுவர் போட்டி தேர்வு பயிற்சிக் கூடத்தின் மாணவர்கள் தேர்வு ----------------- பேராவூரணி திருவள்ளுவர் போட்டி தேர்வு பயிற்சி கூடம் மற்றும் பேராவூரணி நகர வர்த்தகர் கழகம் இணைந்து நடத்திய பயிற்சியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் தேர்வு பெற்றுள்ளனர். பேராவூரணி அருணாதேவி, பெருமகளூர் புவனேஸ்வரி, ஆவுடையார் கோவில் சுபா ஆகியோர் குரூப் 2 முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். பேராவூரணி வருவாய் வட்டாட்சியர், மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் முன்னெடுப்பில் திருவள்ளுவர் போட்டி தேர்வு பயிற்சி கூடம் மற்றும் நகர வர்த்தகர் கழகம் இவற்றோடு இணைந்து வர்த்தக கழக கட்டிடத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. தேர்வில் வெற்றி பெற்ற அரசு அதிகாரிகளே தன்னார்வத்தோடு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட எளிய குடும்பத்தில் பிறந்த கிராமப்புற ம