தமிழ்நாடு அரசு நடத்திய ஊரக திறனறித் தேர்வில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி தஞ்சாவூர் மாவட்ட அளவில் முதலிடம்
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனறித் தேர்வில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ப.ரமாதேவி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஆண்டுதோறும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தஞ்சை மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ள ரமாதேவி, தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் த. பழனிவேல் - ஜெயந்தி இணையரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த மாணவி ரமாதேவி பள்ளி சார்பில் பாராட்டப் பெற்றார். சாதனை மாணவிக்கு மெய்ச்சுடரின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .