மருத்துவ மாணவர்களோடு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!
தனியார் கல்விக் கொள்கையால் கல்விச் சமத்துவம் சரிந்து வரும் சூழலில் சமூக நீதிக்கான பேராயுதமாய் தமிழ்நாட்டு அரசு கொண்டுவந்த ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீடு மருத்துவக் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு கைவசமாகி வருகிறது.
இந்த ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும்.
மருத்துவக் கல்வி மட்டுமின்றி அனைத்து உயர் கல்வியிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் அடுக்கடுக்காய் செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் எளிய குடும்பத்துப் பிள்ளைகளை ஏற்றம் காண செய்வதுதான் சமூகநீதி.
ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அரசே வழங்க வேண்டும்! அதில் அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்க வேண்டும்! தமிழ் வழியில் படித்தவர்கள் உயர்கல்வி என்னும் தேரில் வலம் வந்து வேலை வாய்ப்பைப் பெற்றிட வேண்டும். இதுவே தமிழ்நாட்டு அரசு தமிழர்களுக்கு செய்யும் கைமாறு.
வருகிற ஆண்டுகளில் கலை அறிவியல், பொறியியல், மருத்துவ துணை படிப்புகள் போன்ற அனைத்து உயர் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்குவதில் தமிழ்நாட்டு அரசு முனைப்போடு செயல்பட வேண்டும்.
ஆசிரியர்
மெய்ச்சுடர்
02.02.2022
கண்டிப்பாக நான் இதை ஆதரிக்கிறேன்.
பதிலளிநீக்கு