இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெருமை கொள்கிறேன்

படம்
  பெருமை கொள்கிறேன்                          - அபிநந்தினிமோகன் பெருமை கொள்கிறேன் பெண்ணாய் பிறந்ததற்கு அல்ல என் அப்பாவிற்கு பெண்ணாய் பிறந்ததற்கு   வேலையின் அலுப்போ களைப்போ எதுவாயினும் ஒன்றுமில்லாத அன்றாட நிகழ்வுகளைக்கூட இன்றுவரை சலிப்பில்லாமல் களிப்புடன் கேட்கும் கடவுள்.   அரசாங்கம் இல்லை அரண்மனை இல்லை என் இதய அரியாசனத்தின் அசைக்கமுடியா அரசன் நானும்கூட இளவரசிதான் அரசனால் வளர்க்கப்படுகிறேனல்லவா?   அன்புசெய்வதில் அன்னைக்கு நிகரானவர்  அடித்து மிரட்டாதவர் அருகில் அவர் இருக்க அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.   இறைவனுடன் எல்லாம் ஒப்பிடமாட்டேன் வணங்கினால் மட்டுமே வருவானவன் சுணங்கினாலே அருளும் ஆண்டவன் என் தாயுமானவன் பெருமை கொள்கிறேன் என் அப்பாவிற்கு பெண்ணாய் பிறந்ததற்கு...

பேராவூரணி குருதிக் கொடையாளர்கள் மற்றும் குருதி வகைப் பட்டியல்

படம்
பேராவூரணி குருதிக் கொடையாளர்கள் மற்றும் குருதி வகைப் பட்டியல்   பேராவூரணி தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற இரண்டு குருதிக்கொடை முகாமில் விலைமதிப்பில்லா குருதியைக் கொடையாக வழங்கிய கொடையாளர்கள் பட்டியல்... உங்கள் பார்வைக்காக. உங்களின் அவசரத் குருதித் தேவைகளுக்கு இவர்களை நீங்களும் அனுகலாம்... நீங்களும் இந்தப் பட்டியலில் இணைந்து கொள்ள 9842609980 என்ற புலன எண்ணிற்கு உங்கள் பெயர், முகவரி, கைபேசி எண், குருதி(இரத்த) வகை இவற்றை அனுப்பி வையுங்கள். வாழும் வரை குருதிக்கொடை கொடுப்போம். நலமாக வாழ்வோம்.            

ஓபிசி உறவுகளே! வெளியேறுவோம்...

ஓபிசி உறவுகளே! வெளியேறுவோம்... ------------------------------- உறுப்பினர் அட்டைகளை உதரிவிட்டு வெளியேறுங்கள்... கொடிகள் கட்டாதீர்கள்... கூட்டத்திற்குப் போகாதீர்கள்... வாழ்க முழக்கம் வேண்டாம்...! முதலாளிய கட்சிகள் சம்பாதிக்க முதலீடா நீங்கள்? அவர்கள் வரிச்சுருட்ட வாங்கு வங்கியா நீங்கள்? ஓ பி சி யின் உரிமைகள் பறிபோகிறது மருத்துவம் படிக்க ஒபிசி ஒதுக்கீடு இல்லையாம்! எட்டு லட்சம் சம்பாதிப்பவன் ஏழையாம்! ஏற்றத்திற்கான மாற்றைக் கேட்டால் ஏமாற்றிட மாற்றாக வருகிறார்கள்! இவர்களை நம்பியது போதும் வெளியேறுங்கள்.... வெள்ளையரை வெளியேற்ற அவர்கள் பொருட்களை புறக்கணித்தது இந்தியா... இந்த கொள்ளையர்களை வெளியேற்ற கட்சிகளைப் புறக்கணித்து வெளியேறுங்கள் ! புறக்கணிப்பதே புதிய போராட்டம் அதுவே அறப்போராட்டம்... அனைவரும் வெளியேறுவோம் கொத்துக் கொத்தாய் வெளியேறுவோம்... ஓபிசி உரிமைகளுக்காக உரத்து முழங்குவோம்!

அன்புமிக்க ஓபிசி உறவுகளே!

படம்
அன்புமிக்க ஓபிசி உறவுகளே! ----------------------------------------------- தமிழ்நாட்டின் மிகப்பெரும்பான்மையான சமூகமாக இருப்பது நமது ஓபிசி பிரிவுதான். முக்குலத்தோர், முத்திரையர், வன்னியர், கொங்கு வெள்ளாளக் கவுண்டர், நாடார், வெள்ளாளர், வேளார், மருத்துவர், நாயக்கர், செட்டியார் என நூற்றுக்கும் மேற்பட்ட சாதிப்பிரிவுகளை கொண்டதுதான் ஓபிசி வகுப்பு. தமிழ்நாடு அரசு இந்த ஓபிசி பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50% இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. இந்திய அரசு, மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஓபிசி பிரிவினருக்கு மிக நீண்ட போராட்டத்திற்கு ப் பிறகு 27% மட்டுமே இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆகப் பெரும்பான்மையாக உள்ள சமூகத்திற்கு மிகக்குறைந்த அளவில் இடஒதுக்கீடு வழக்கிவிட்டு, ஆகச்சிறுபான்மை மக்களாக இருக்கக்கூடிய பார்ப்பனிய உயர்சாதி பிரிவினருக்கு அவர்களின் மக்கள்தொகை விழுக்காட்டிற்கும் அதிகமாக 10% இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. மிகப்பெரிய போராட்டத்தின் விளைவாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஓபிசி பிரிவினருக்கு கிடைத்த குறைந்தபட்ட 27% இடஒதுக்கீட்டையும் தற்போது மர

பேராவூரணி யை பாதுகாப்போம்

படம்
 பேராவூரணி யை பாதுகாப்போம் ----------- பேராவூரணி ஆவணம் சாலை பெரியகுளம் அருகில் அரசு டாஸ்மாக் மதுக்கடை அமைக்க இருப்பதாக செய்திகள் பரவிய வண்ணம் உள்ளது. பொது மக்களும் இளைஞர்களும் ஒன்று திரண்டு 564 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளத்தை தூர்வாரி பாதுகாத்து வருகிறோம். இந்நிலையில் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கும் குடியிருப்பவர்களுக்கும் அச்சுறுத்தலாக மதுக்கடையை அமைக்க நினைப்பது அறம் ஆகுமா? டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிரான சூழல் பேராவூரணி பகுதியில் நிலவி வருவது டாஸ்மாக் நிர்வாகத்திற்கு நன்றாகவே தெரியும்.  குறிப்பாக சேது சாலை பட்டுக்கோட்டை சாலை முதன்மைச் சாலை பகுதிகளில் மதுக்கடை அமைக்க இருந்த நேரத்தில் பொதுமக்கள் தாய்மார்கள் ஒன்று திரண்டு எழுச்சிப் போராட்டங்களை நடத்தி தடுத்து நிறுத்தினார்கள்.  இந்நிலையில் மீண்டும் பேராவூரணி பகுதிக்குள் டாஸ்மாக் மது கடை அமைக்க நினைப்பது பொது மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. பேராவூரணி பெரிய குளத்திற்கு அருகில் டாஸ்மாக் மது கடை அமைக்க முயற்சித்தால் இளைஞர்கள் பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்பார்கள். எனவே வருவாய்த்துறை உடனடி

''எழுத்துகள் உருவாகும் முன்பே தோன்றியது ஓவியங்கள், மொழியும், கலையும் நமது கண்கள்'' மெய்ச்சுடர் ஓவியப் போட்டி பரிசளிப்பு மற்றும் தமிழ்நாடு தாயகநாள் விழாவில் பேச்சு.

படம்
  ''எழுத்துகள் உருவாகும் முன்பே தோன்றியது ஓவியங்கள், மொழியும், கலையும் நமது கண்கள்'' மெய்ச்சுடர் ஓவியப் போட்டி பரிசளிப்பு மற்றும் தமிழ்நாடு தாயகநாள் விழாவில் பேச்சு.   மெய்ச்சுடர் மின்னிதழ், கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப்போட்டியை அறிவித்தது. இந்தப் போட்டியில் 101 ஓவியங்கள் மாணவ ஓவியர்களால் படைத்தளிக்கப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாடு தாயகநாள் விழாவில் பரிசளிக்கப்பட்டது. பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் தமிழ்நாடு தாயகநாள் விழா மற்றும் ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியின் கலை ஆசிரியர் கா.மல்லிகாதேவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்வழிக்கல்வி இயக்கத்தின் தலைவர் தோழர் சின்னப்பத்தமிழர் சிறப்புரையாற்றினார். அன்னை அமராவதி கல்வி அறக்கட்டளையின் பொறுப்பாளர் முனைவர் ஆ.ஜீவானந்தம், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் ஆசிரியர் சு.தமிழ்ச்செல்வன், கிழக்குப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் த.பழனிவேல், தமிழக மக்கள் புரட்சிக்கழக பெ