அரசுப் பள்ளிகளை நோக்கி ஆசிரியர்கள்

 

அரசுப் பள்ளிகளை நோக்கி ஆசிரியர்கள்
-------------------------------------------------------------------

அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பதில்லை என்ற விமர்சனம் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிகள் மீது பொதுமக்களிடம் இருக்கும் எதிர்மறையான சிந்தனை போக்கு, அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களிடமும் அவர்களின் இணையர்களிடமும் தொடர்ந்து இருந்து வருகிறது.
ஒரு ஆசிரியர் தனது பிள்ளையை அரசுப் பள்ளிகள் சேர்த்திட நினைத்தால் அந்த ஆசிரியரின் இணையர் ( கணவன் அல்லது மனைவி ) அதை அனுமதிப்பதில்லை.
தனியார் பள்ளிகள் மீதான மோகம் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குடும்பத்திலும் இருப்பதுதான் இதற்கு காரணம்.
இந்நிலை சிறிது சிறிதாக மாற்றம் பெற தொடங்கியுள்ளது.
தற்போது பணியில் சேர்ந்துள்ள இளம் தலைமுறை ஆசிரியர்களிடம் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான சிந்தனையும் அப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் நிலையும் தொடங்கியுள்ளது.
ஐந்து ஆண்டுக்கு முன்னர் பொன்னாங்கண்ணிகாடு நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முருகையன் தனது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க முடிவெடுத்தார். அவரது மனைவியும் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இது பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியது. ஆசிரியர் முருகையன் மற்றும் அவரது மனைவியின் மீது பொதுமக்கள் நம்பிக்கையை பெற்றனர். நடுத்தர வருமானம் கொண்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். இது படிப்படியாக அடுத்த ஆசிரியர்கள் மத்தியிலும் பரவி பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
தற்பொழுது இந்த ஆண்டு இளம் தலைமுறை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்த்து வருகிறார்கள்.
குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் முனைவர் க.சற்குணம் தனது மகனையும் மகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்த்துள்ளார்.

ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நீலகண்டன் தனது மகளை பேராவூரணி வட கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்துள்ளார்.

பெருமகளூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வரும் பாஸ்கரன் தனது மகளை பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்துள்ளார்.
பரவலாக ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது தொடர்ந்து வருகிறது.

அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்காக தொடர்ந்து செயலாற்றி வரும் பேராவூரணி வட கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் காஜா மைதீன் பாராட்டுக்குரியவர்.
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வரும் தமிழ் வழிக்கல்வி இயக்கத்திற்கும மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா