அனைவரும் அரசுப்பள்ளியில் பிள்ளைகளை சேருங்கள் - துளிர் அறக்கட்டளை தொடக்க விழாவில் பேச்சு.

அனைவரும் அரசுப்பள்ளியில் பிள்ளைகளை சேருங்கள் - துளிர் அறக்கட்டளை தொடக்க விழாவில் பேச்சு.


 

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1997-98 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர்.  

இந்த அறக்கட்டளையின் தொடக்க விழாவில் பேசிய பேராவூரணி நகர வர்த்தக கழக தலைவர் ஆர்.பி. இராஜேந்திரன் கூறியதாவது, 

"அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக குறைந்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.  பாடப் புத்தகங்களில் இருந்து மடிக்கணினி வரை அனைத்தும் அரசே வழங்குகிறது. நெடுந்தூரம் நடந்துசென்று படிக்கும் மாணவர்களின் நலனுக்காக மிதிவண்டி வழங்குகிறது. மாணவர்களின் தேவைகளை அரசு பார்த்து பார்த்து நி​றை​வேற்றி வருகிறது.  

கல்விக்கண் திறந்த காமராஜர் காலம் தொட்டு தற்போது ஆட்சியிலிருக்கும் அரசு வரை அரசுப் பள்ளியின் மேம்பாட்டுக்காக ஆட்சியாளர்கள் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்கள்.  

இந்த அறக்கட்டளையை தொடங்கும் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க உறுதி ஏற்க வேண்டும்" 

என்று வலியுறுத்திப் பேசினார்.  



குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நல்லாசிரியர் மனோகரன்  தலைமையில் நடைபெற்ற இந்த தொடக்க விழாவில் அறக்கட்டளையின் பெயர் பலகையை பணி நிறைவு பெற்ற ஆசிரியர் எம்.மெய்ஞ்ஞானமூர்த்தி திறந்து வைத்தார், 

அறக்கட்டளையின் நோக்கங்கள் குறித்து அமைப்பின் தலைவர் பழனி அரசையா விளக்கிக் கூறினார், 

அரிமா சங்கத் தலைவர் ப.கோவிதரன், சுழற் சங்கத்தலைவர் முருகவளவன், பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் கா. கான்முகமது, கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க  தலைவர் வே. கார்த்திகேயன்,  

மேனாள் பேரூராட்சி பெருந்தலைவர் நா. அசோக்குமார், திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகப் பேச்சாளர் அப்துல் மஜீத், 

பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கோவி தாமரைச்செல்வன்,   இராமநாதன், பணி நிறைவு பெற்ற தமிழ் ஆசிரியை பா இந்திராதேவி, தொழிலதிபர் இ.வி. காந்தி, இதழாளர் கெ.ஜெயபாலன் மெய்ச்சுடர் நா. வெங்கடேசன்,   நெடுவாசல் ராம்குமார்,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்,

அறக்கட்ட​ளையின் ​நோக்கம்  குறித்து அ​மைப்பின் த​லைவர் பழனி அரசையா விளக்கினார்.

முன்னதாக அறக்கட்டளை நிர்வாகக் குழு உறுப்பினர் நாகேந்திரகுமார் வரவேற்றார், முனைவர் வேத கரம்சந்த் காந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், ஆசிரியர் கவின் நன்றி நவின்றார்.  நிகழ்வில் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா