ஆல்போல் தழைக்க" அப்துல் கலாம் பிறந்த நாளில் வாழ்த்துகிறோம்!
மேனாள் குடியரசுத் தலைவர், இளைஞர்களின் கனவு நாயகன் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாளான இன்று பேராவூரணியில் ஆலமரத்து விழுதுகள் என்ற அமைப்பின் பணி போற்றுதலுக்கு உரியது.
பேராவூரணியில் பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு அவற்றைப் பாதுகாக்க உறுதி ஏற்று இருக்கிறார்கள் இந்த அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்.
பள்ளிக்கூடம், சாலையோரங்கள், கோவில்கள் போன்ற இடங்களில் மரக்கன்றுகளை நட்டு அந்த மரக்கன்றுகளை பாதுகாக்க முறையான குண்டுகளையும் அமைத்திருக்கிறார்கள்.
இளைஞர்களின் மத்தியில் ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்த தலைவரின் பிறந்தநாளில் இப்பணியை தொடங்கியிருக்கிறார்கள்.
இவர்களின் இப்பணி பலராலும் பாராட்டப்பட்டது. ஆசிரியர்கள் வணிகர்கள் அரசு ஊழியர்கள் என பலரும் இவர்களின் பணிக்கு ஆதரவு கொடுத்து மரக்கன்று நடும் விழாவில் பங்கு எடுத்தும் இருக்கிறார்கள். மேலும் நட்ட மரக்கன்றுகளை பாதுகாத்திடவும் உறுதி ஏற்றிருப்பது போற்றத்தக்க செயலாகும்.
.
ஆலமரத்து விழுதுகள் என்ற எழுச்சி மிக்க இளைஞர் கூட்டம் தொடங்கியிருக்கும் இந்தப் பணி மென்மேலும் வளர்ந்து பசுமை சூழ்ந்த சமூகத்தை உருவாக்குவது நிச்சயம்.
இன்றைய இளைஞர்கள்
ஆலமரத்தடியில் அமர்ந்து அறமற்ற அரட்டை அடிக்கும் கூட்டமல்ல!
ஆல்போல் தழைத்து சமூகத்திற்கு நாளெல்லாம் நலமளிக்கும் கூட்டம்! என்பதை இந்த அமைப்பு மெய்ப்பித்து இருக்கிறது. மெய்ச்சுடர் நெஞ்சம் நெகிழ வாழ்த்துகிறது...்
மரம்நடுவது என்பது 1.கதிரவனின் ஆற்றலை சேமிப்பது 2.காற்றிலுள்ள கரிக்காற்றை உறிஞ்சி உள்வயப்படுத்தி சேமிப்பதோடு சுற்றுச் சூழலை தூய்மைப்படுத்துவதும் புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்துவது.3. நீராவியை வெளியிட்டு சூழலை குளிர்விப்பதும் மழைப்பொழிவிற்கு உதவுதும் என பல பயன்கள். வாய்க்கால்,ஆற்றங்கரை,சாலையோரம் போன்ற இடங்களில் 1 கிமீ தூரத்தில் 75 மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால் 30 வருடங்களில் சுமார் 75 லட்சமாக அதன் மதிப்பு உயரும்.சராசரி ஆண்டு வருமானம் 2.5 லட்சம்!!!
பதிலளிநீக்கு