நூலைப் படி!
நூலைப் படி! விகடன் பதிப்பகம் பதிப்பித்துள்ள மருத்துவர் துரை நீலகண்டன் அவர்கள் எழுதிய முடக்கிப்போடும் மூட்டுவலி - காரணங்களும் தீர்வுகளும் என்ற நூல் குறித்து இப்பதிவில் காண்போம்! விவசாய பின்னணி கொண்ட எளிய குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் பயின்று தாய்மொழி வழியாக கற்றுத் தேர்ந்த மருத்துவர் துரை நீலகண்டன் இந்த நூலை எழுதியுள்ளார். இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார் கற்றதன் பயன் சமூகம் பயனுற விளக்கிக் கூறவேண்டும் அதுவே கற்றவரின் சிறப்பு என்கிறார் திருவள்ளுவர். வள்ளுவரின் குறளுக்கேற்ப தான் சார்ந்த துறையில் மக்களின் தேவையுணர்ந்து இந் நூலைப் படைத்து இருக்கிறார் ஆசிரியர். நூலின் ஒவ்வொரு தலைப்புகளையும் பார்த்தவுடன் படிக்கத் தூண்டும் வகையில் அமைத்திருக்கிறார். தலைப்புகளை பார்த்தவுடன் தமக்கான சிக்கலை நோக்கி பக்கங்களை புரட்ட வைத்துவிடுகிறார். நுகர்வு கலாச்சாரமும் உலகமயமும் சேர்ந்து மக்களை வலியோடு வாழ வைத்திருக்கிறது. மக்களின் வலி அறிந்து வழியமைத்து தருகிறார் இந்நூலின் ஆசிரியரான மருத்துவர் நீலகண்டன். கழுத்து வலி கீழ் முதுகு வலி இடுப்பு வலி இடுப்பு