இடுகைகள்

பள்ளிக்கு இருக்கை வழங்கிய தாய் - எஸ்.எம்.சி. கூட்டத்தில் பாராட்டு

படம்
பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.    இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் நிரஞ்சன் என்ற மாணவனின் தாய் தன் மகனோடு படிக்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் வகுப்பறையில் அமர்ந்து படிக்க நாற்காலிகளை வழங்கினார்.  சுமார் 5 ஆயிரம் மதிப்புள்ள நாற்காலிகளை பள்ளிக்கு இலவசமாக வழங்கிய இவர், தனது மகன் படிக்கும் வகுப்புப் பிள்ளைகள் அனைவரும் நாற்காலியில் அமர்ந்து படிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் குட்டி நாற்காலிகளை வழங்கியதாக குறிப்பிட்டார்.   கொடை வழங்கிய நிரஞ்சனின் பெற்றோர் நிஷாந்தி - சிவனேசன் இணையருக்கு பள்ளி மேலாண்மை குழுவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.   முன்னதாக பள்ளி மேலாண்மை குழு தலைவி நித்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணைத் தலைவர் ஷீலா ராணி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஹபீபா ஃபாரூக், பெற்றோர் உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியரும் எஸ்.எம்.சி. ஆசிரிய உறுப்பினருமான காஜா முகைதீன் வரவேற்புரை நிகழ்த்தி நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களை முன்மொழிந்தார்.   ந

பேராவூரணியில் புதுப்பொலிவுடன் ரமா மகளிர் ஆடையகம்

படம்
நாட்டாணிக்கோட்டை சாலை முடப்புளிக்காடு பகுதியில் அன்புத் தோழர் த. பழனிவேல் அவர்கள் இல்லத்திற்கு அருகில் ரமா மகளிர் ஆடையகம் நாளை 20.10.2024 முதல் செயல்பட உள்ளது. வாடிக்கையாளர்களின் நன்மதிப்போடு நீலகண்ட பிள்ளையார் திருக்கோவில் முன்பாக, சந்தை எதிரில் செயல்பட்டு வந்த ரமா டெக்ஸ் தற்பொழுது மீண்டும் ரமா மகளிர் ஆடையகமாக வளர உள்ளது.  போட்டிகள் நிறைந்த வணிக உலகில் நுகர்வு கலாச்சாரத்தை வாடிக்கையாளர்களிடம் திணித்து பெரும் முதலீட்டில் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. வாடிக்கையாளர் நலன் என்ற பெயரில் செய்யப்படும் ஆடம்பர செலவுகளும் வாடிக்கையாளர்கள் தலையிலேயே கட்டப்படுகிறது. எளிமையான வணிக முறைகள் மறைந்து வருகின்றன.  இல்லத்திலேயே குடும்ப உறுப்பினர்களின் உதவியோடு சிறு தொழிலாய் செய்யப்படும் வணிக முறைகள் மறைந்து அதன் வாய்ப்புகளையும் பெரும் வணிக நிறுவனங்கள் சுவைத்து செரிக்கின்றன.  கனிவான சொல், வாடிக்கையாளர் நலன், தரமான ஆடைகளை குறைந்த விலைக்கு தர வேண்டும் என்கிற பேரவா, ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அதனால் வாடிக்கையாளர்கள் மீது திணிக்கப்படும் கூடுதல் விலை உயர்வை தடுத்து குறைந்த விலைக்கு மகளிர் ஆடைகளை வழங

வாழ்த்துகள் கலைஞர்களே!

படம்
பேராவூரணி பாரதி தையல் பயிலகத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் தையல் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.  நிகழ்வில் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழை பயிற்றுநர் நித்யா வழங்கினார். தையல் கலைஞர்கள் தங்களின் நுட்பம் நிறைந்த கலையால் மக்களை மகிழ்விக்கும் பெரும் பணியை செய்கிறார்கள்.  தங்களின் அயராத உழைப்பால் விழா காலங்களில் சிறுவர்களையும் பெரியவர்களையும் கொண்டாட வைப்பவர்கள் இந்த தையல் கலைஞர்கள்.  ஆயத்த ஆடைகளின் வரவால் தனித்துவமாக அளவெடுத்து தைத்து போடும் பண்பாடு மறைந்து வந்தாலும் மீண்டும் தையல் கலைஞர்களுக்கான வாய்ப்புகள் பெருகி வருகிறது.   இங்கு பயிற்சி பெற்று செல்லும் மாணவர்கள் தொடர்ந்து ஆடை வடிவமைப்பு நுட்பங்களை அறிந்து பணியாற்ற மெய்ச்சுடர் வாழ்த்துகிறது.

திருக்குறள் மற்றும் திருவாசகம் ஆய்வாளர்களுக்கு விருது

படம்
திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வுகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலர் முனைவர் க. இளங்கோ அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் திருவாளர்கள் கந்தசாமி மாணிக்கம் மற்றும் பத்மாவதி மாணிக்கம் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் திருக்குறள் மற்றும் திருவாசகம் ஆய்வாளர்களுக்கான விருதுகள் தலா ஒரு லட்சம் ரூபாய் உள்ளடக்கியதாகும். விருத்தாளர்களை தேர்வு செய்வதற்கு உரிய ஆய்வாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்ப படிவத்தினை அறக்கட்டளையின் இணையதளமான www.tnfindia.org என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் 10.10.2024 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள், தமிழ்நாடு அறக்கட்டளை, எண்: 27, டெய்லர்ஸ் சாலை, கீழ்பாக்கம், சென்னை 600010 என்னும் முகவரிக்கு அனுப்பி வைத்தடல் வேண்டும். தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

பசுந்தாள் உரம் நிலத்தின் வளம்- வேளாண் துணை இயக்குனர் பேச்சு

படம்
பேராவூரணி வட்டாரம் ரெங்கநாயகிபுரம் கிராமத்தில் குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தின் கீழ் இயந்திர நெல் நடவு செய்யப்பட்ட வயல்கள் மற்றும் ஜிங் சல்பேட் பயன்படுத்தப்பட்ட வயல்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் தஞ்சாவூர் மாவட்ட மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குனர் எஸ் மாலதி.  பயனாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப் பட்டதா? என்றும் உழவர்களை கேட்டறிந்தார்.   பேராவூரணி முதன்மை விரிவாக்க மையத்தில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வறட்சியை தாங்கி வளரக்கூடிய சொர்ணாசப் நெல் விதைகளை, இடு பொருட்களுடன் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் காலகம் கிராமத்திற்கு உட்பட்ட அஞ்சுரணிக்காடு பகுதியில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் உழவர் வயல் நாள் விழாவில் பங்கேற்று பசுந்தாள் உரங்களின் பயன்பாடு குறித்து தொழில்நுட்ப விளக்கம் அளித்தார்.   நிகழ்வில் டிராக்டர் கொண்டு பசுந்தாள் உரப்பயிரை மடக்கி உழவு செய்து மண்ணுக்கு வளம் சேர்க்கும் தொழில்நுட்பம் செயல் விளக்கமாக செய்து காட்டப்பட்டது. உழவர் வயல் நாள் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேராவூரணி வேளாண்ம

ஜவுளி வியாபாரியின் மகள் சாதனை

படம்
பேராவூரணி ஜவுளி வியாபாரி சிவக்குமார் இல்லத்தரசி ஜோதி இவர்களின் மகள் ஸ்ரேயா மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 627 மதிப்பெண்கள் பெற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவராக படிப்பதற்கு வாய்ப்பு பெற்றுள்ளார்.  சிறுவயது முதலே மருத்துவராவதை இலக்காக கொண்டு படித்து வந்த ஸ்ரேயா பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் பயிற்சி நிறுவனத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண்டார்.  "நாங்க பட்ட கஷ்டம் எங்க  புள்ளைங்க படக்கூடாதுன்னு  தான் ஆசைப்பட்டோம்.  எங்க புள்ளைங்க பொறுப்போடு படிச்சு இன்னைக்கு மருத்துவராக போகுதுன்னா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.  தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீடு கிடைச்சிருந்ததுன்னா என்னால ஒண்ணுமே செஞ்சிருக்க முடியாது.  அரசு கல்லூரியில இடம் கிடைச்சதால ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.  நம்ம பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைச்சதா நினைச்சு பெருமையா இருக்கு.  நிறைய பேரு பொம்பள புள்ளைய ஏன் படிக்க வைக்கிற அப்படின்னு கேட்டாங்க.  ரெண்டு வருஷமா நீட்டுக்கு படிச்சுக்கிட்டு இருக்கா வேற ஏதாவது படிக்க வைக்கலாமில்ல அப்படின்னு நிறைய பேரு சொன்னாங்க.  நானும் கூட

குருவிக்கரம்பையில் இருந்து கன்னியாகுமரி - சாதித்த அரசு பள்ளி மாணவன்

படம்
செல்வன் சிவசுப்பிரமணியன், இவர் குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்.   சிறு வயது தொடங்கி மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு படித்து வந்த சிவசுப்பிரமணியன் 12-ம் வகுப்புக்குப் பிறகு நீட் தேர்வுக்கு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.   அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வி வாய்ப்பை பெறுவதற்கான தமிழ்நாடு அரசின் ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு கிடைக்கப்பெற்று தற்பொழுது கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் படிக்க உள்ளார்.   சிவசுப்பிரமணியன் நீட் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண் 530. "எங்க ஊர்லையே நான் தான் முதல் மருத்துவர்" என்று பெருமை பொங்க கூறும் சிவசுப்பிரமணியன் அவர் குடும்பத்தில் முதன் முதலாக உயர் கல்வியை எட்டிப் பிடித்துள்ளவர்.  அப்பா கருப்பையன் ஒரு விவசாய கூலித் தொழிலாளி.  அம்மா வள்ளி இல்லத்தரசி.  அண்ணன் மகேஸ்வரன் இயந்திரவியலில் பட்டயம் படித்தவர், இந்தக் குடும்பத்திலிருந்து சிவசுப்பிரமணியன் மருத்துவராக மலரப் போகிறார்.   தங்கள் பள்ளி மாணவனின் வெற்றியை பதாகை வைத்து கொண்டாடி மகிழ்கிறத