இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"கேள்வி கேட்கும் நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்!" மணமேல்குடியில் தமுஎகச விருது வழங்கும் விழாவில் பேச்சு

படம்
கடந்த 9 ஆண்டுகளாக இந்த விருது வழங்கும் விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மணமேல்குடி கிளை பொறுப்பாளர்கள்.   அரசுப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், மாணவர்களிடம் கல்வி உணர்வூட்டும் உன்னதமான ஆசிரியர்களுக்கும், மக்களின் நலனுக்காக நேரம் காலம் கருதாமல் சிறப்பாக பணியாற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய கடை நிலை பணியாளருக்கும், சுகாதாரத்துறையில் சீரியப் பணியை மேற்கொண்ட மனிதருக்கும் விருதுகளை வழங்கி வாழ்த்தும் இனிய நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்தது.  மணமேல்குடி கிளை தமுஎகச தலைவர் மரியாதைக்குரிய தோழர் இந்தியன் கணேசன் அவர்கள் அழைப்பின் பெயரில் நிகழ்வில் கலந்து கொண்டேன்.   விருதுகளைப் பெற்ற மாணவர்களும், மாணவர்களை பெற்றவர்களும், சமூகத்தால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட மின்சாரத்துறை மற்றும் சுகாதாரத்துறை கடைநிலைப் பணியாளர்களும், அவர்களின் இணையர்களும் அடைந்த மகிழ்வுக்கு அளவே இல்லை.   ஒன்பது ஆண்டுகளாக ஒப்பற்ற பணியாக இந்தப் பணியை முன்னெடுக்கிறார்கள் முற்போக்கு எழுத்தாளர்களும் கலைஞர்களும். இந்நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்த அழைக்கப்பட