மாணவர் சேர்க்கைக்கு எந்த தனிப்பட்ட முயற்சியும் செய்வதில்லை! பள்ளியின் கல்விச் சூழல் மாணவர்களை ஈர்த்துள்ளது - பேராவூரணி வடகிழக்கு பள்ளியின் ஆண்டு விழாவில் வட்டார கல்வி அலுவலர் பேச்சு!




பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.  வட்டார கல்வி அலுவலர் க.கலாராணி நிகழ்வுக்கு தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார்.  அவர் தமது உரையில், "இந்தப் பள்ளி மிகச் சிறப்பாக இயங்கி வரும் பள்ளியாகும்.  இங்குள்ள ஆசிரியர்களின் சிறப்பான செயல்பாட்டால் பள்ளியின் கல்விச் சூழல் மிகச் சிறப்பாக உள்ளது.   ஒவ்வொரு ஆண்டும் மாணவர் எண்ணிக்கை இப்பள்ளியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  இதனால் இப்பள்ளியின் மாணவர் சேர்க்கைக்காக உங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கப் போவதில்லை.   மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இட வசதியை இப்பள்ளிக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.  போதிய இட வசதி இருந்தால் உரிய கட்டிட வசதியை உடனடியாக செய்து தர தயாராக உள்ளோம்.  மேலும் இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப இன்னும் கூடுதலாக இரண்டு ஆசிரியர்களை விரைவில் நியமிக்க உள்ளோம். விரைவில் பள்ளி மாணவர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்ய அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வோம். இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியர்களின் செயல்பாடுகளும் போற்றுதலுக்குரியது", என்றார்.


ஆசிரியர்களின் சிறப்பான திட்டமிடலோடு மிக நேர்த்தியாக விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  


இலக்கிய மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் மேடையில் சிறப்பு விருந்தினர்கள் கரங்களில் பரிசுகள் பெற சிறப்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.  


மாணவர்கள் தங்கள் திறமைகளை கலை நிகழ்ச்சிகளாக மேடையில் சிறப்பாக நிகழ்த்திக் காட்டினார்.  


சூழலியல் சார்ந்த நடனம், தேசத் தலைவர்கள் குறித்த மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில உரை, அவ்வை ஆத்திச்சூடியின் அத்தனை கவிதைகளையும் ஒப்பித்தல் என மாணவர்களின் திறன்கள் மேடையில் பளிச்சிட்டது.


மாணவர்களின் கலை நிகழ்வுகளுக்காக முன்னதாகவே திட்டமிட்டு ஆசிரியர்களும் பெற்றோர்களும் மிகச் சிறப்பான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கி இருந்தது மேடையில் வெளிப்பட்டது.


பள்ளி வளாகத்தில் போதிய இடவசதி இல்லாததால் ஆண்டு விழா வட்டாட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.


நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் அ.அங்கயற்கண்ணி, வட்டாட்சியர் ரா.தெய்வானை, வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.முருகேசன், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், பேரூராட்சி உறுப்பினர் ஹபீபா ஃபாரூக், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சீ.கௌதமன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சி.ஜசிரா ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.  பள்ளித் தலைமையாசிரியர் ச.சித்ராதேவி ஆண்டறிக்கை வாசித்தார்.  முன்னதாக நல்லாசிரியர் அ.காஜாமுகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.  


நிகழ்வில் முனைவர் சண்முகப்பிரியா, சமூக ஆர்வலர் இரா ராம்குமார், வர்த்தகர் கழக பொருளாளர் மு.சாதிக் அலி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் மு.த.முகிலன், நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், வெவ்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர்.  


நிறைவாக பள்ளி ஆசிரியர் பெ. ரேணுகா நன்றி கூறினார்.


பள்ளி ஆண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்திய பள்ளி நிர்வாகம் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் மெய்ச்சுடரின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.











கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா