பேராவூரணி வட்டாட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் வழி கல்வி இயக்கம்
பேராவூரணியில் குடிமணையின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு குடியிருப்பு வளாகங்களை உருவாக்கி அந்த வளாகங்களுக்குத் திருவள்ளுவர், தொல்காப்பியர், பாவேந்தர், பாவாணர், அவ்வையார், பாரதியார் போன்ற தமிழ் அறிஞர்களின் பெயர்களைச் சூட்டி மகிழ்கிறார் பேராவூரணி வட்டாட்சியர் த. சுகுமார். உலக மயம், தனியார் மயம், நுகர்வு கலாச்சாரம் எல்லாம் சேர்ந்து தமிழை அழித்து வரும் சூழலில் வணிகப் பலகைகள் எல்லாம் தமிழை மறந்து வரும் காலத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்குத் தமிழ் வளர்த்தச் சான்றோர்களின் பெயர்களைச் சூட்டும் ஒப்பற்ற பணியை செய்து வருகிறார் வட்டாட்சியர். இச்செயல் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழறிஞர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு எங்கும் மருவிப்போன தமிழ்நாட்டு ஊர் பெயர்களை மீட்டெடுப்பது, தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் மட்டுமே கல்வியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவது, பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தமிழ் பிள்ளைகளின் பெயர்களை தமிழில் சூட்ட பெற்றோர்களிடம் அறிவுறுத்துவது, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி படிப்