இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேராவூரணி வங்கி மேலாளருக்குப் பாராட்டு விழா

படம்
பேராவூரணி எஸபிஐ வங்கிக் கிளையின் முதன்மை மேலாளராக பணியாற்றி வருகிறார் ராகவன் சூரியேந்திரன். கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்தக் கிளையில் பணியாற்றி வருகிறார். பொதுமக்கள் சேவையில் இப்பகுதி மக்களிடம் பெரும் அதிருப்தியை கொண்டிருந்த இந்த வங்கி இவர் முதன்மை மேலாளராக பொறுப்பேற்றதற்குப் பிறகு பெரும் மாற்றம் கண்டது. உடனுக்குடன் வாடிக்கையாளர்கள் தேவைகள் நிறைவேற்றப்பட்டன. கல்விக்கடன், மகளிர் குழுக்களுக்கான தொழிற்கடன், தனிநபர் கடன், வீட்டுக் கடன் போன்ற கடன் திட்டங்கள் தொய்வின்றி நிறைவேற்றப்பட்டது. உரிய ஆவணங்களுடன் செல்லும் யாரும் இவ் வங்கியால் அலைக்கழிக்கப்படுவதில்லை என்ற நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் மகளிர் குழுக்களுக்கான கடனாக 22 கோடியை வழங்கி சாதனை படைத்தார் இந்த வங்கி கிளை முதன்மை மேலாளர். ஊரகப்பகுதியான இப்பகுதியில் வங்கி விழிப்புணர்வற்ற மக்களிடம் வங்கியின் பல்வேறு தேவைகளை விளக்கி திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மேலாளர் முனைப்போடு செயல்பட்டார். எளியவர்களும் அணுகுவதற்கு ஏற்றவராக பணியாற்றினார். தற்பொழுது வங்கி விதிகளின்படி ஐயா ராகவன் சூரியேந்திரன் அவர்கள் பணி மாறுதல் பெற்று வேறு ஊ

உழைப்பிற்கு பதிலாக சூதாட்டத்தை மையப்படுத்தி இந்திய பொருளாதாரம் கட்டமைக்கப்படுகிறது 'மே' நாள் பொதுக் கூட்டத்தில் சி.மகேந்திரன் பேச்சு.

படம்
  சேதுபாவாசத்திரம் பேராவூரணி ஒன்றியங்களைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மே தின பேரணி பொதுக்கூட்டம் பேராவூரணியில் நடைபெற்றது. ஏ ஐ டி யு சி சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் கே எஸ் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும் தாமரை இலக்கிய இதழின் ஆசிரியருமான தோழர் சி.மகேந்திரன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் "இந்திய பொருளாதாரம் சூதாட்டத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்படுகிறது.   உழைப்பு மூலதனத்திற்கு பதிலாக நிதி மூலதனத்தை திரட்டுவதற்கு அரசு முனைப்பு காட்டி வருகிறது. மே தின வெற்றி என்பது ஏதோ தேர்தல் வெற்றியைப் போன்றது அல்ல.   எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கையோடு 25 லட்சம் பேர் கலந்து கொண்ட மாபெரும் போராட்டத்தில் 22 பேர் இறந்து போகிறார்கள், இந்தப் போராட்ட பின்னணி கொண்ட ஐந்து தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவர்களின் பெரும் தியாகத்திற்கு பிறகு உருவானது தான் மே தினம். இன்று 5 - 6 முதலாளிகளுக்காக அரசு நடத்தப்பட்டு வருகிறது.   860 கோடியில் முகேஷ் அம்பானியின் வீடு கட்டப்பட்டுள்ள மாநிலத்தில் தான் 20 லட்சம் மக்கள் தெருவ

மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற அமிழ் விளையாட்டுப் பள்ளி மாணவர்கள் வட்டாட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

படம்
பேராவூரணி அருகே தனியார் பள்ளியில் நடை மட்டபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பேராவூரணி பகுதியில் பல்வேறு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகள் பங்கேற்று பதக்கங்களைத் தட்டிச் சென்றனர். குறிப்பாக தொடங்கி ஓர் ஆண்டுக்குள் 11 பதக்கங்களை வாரிக்குவித்தனர் அமிழ் விளையாட்டுப் பள்ளி மாணவர்கள்.  உடற்கல்வி ஆசிரியரும், சமூக செயற்பாட்டருமான தோழர் மருத. உதயகுமார் நடத்தி வரும் விளையாட்டு பள்ளி இது.   கைபேசியை வைத்துக்கொண்டு, இருந்த இடத்தை விட்டு நகராமல் காணொளி விளையாட்டில் கட்டுண்டு கிடக்கும் சிறுவர்களை விளையாட்டு மைதானத்தை நோக்கி வரவழைத்த பெருமை இந்த அமிழ் விளையாட்டுப் பள்ளிக்கு உண்டு. பேராவூரணி வட்டாட்சியர் வளாக விளையாட்டு மைதானத்தில் மழையர் பள்ளி மாணவர்கள் முதல் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வரை சுமார் 76 மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார் ஆசிரியர் உதயகுமார். தொடங்கிய ஓராண்டுக்குள் மாணவர்களிடம் பெரிய அளவில் விளையாட்டு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.  கீரமங்கலம், பேராவூரணி பகுதிகளில் நடைபெற்ற தொடரோட்டப் போட்டிகளில் இப்ப பயிற்சிப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.   தற்பொழுது உடையநாடு ராஜராஜன் பள்ளியில்

"நாங்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! எங்கப் பிள்ளைகளும் அரசுப் பள்ளி மாணவர்கள்தான்!" நம்பிக்கை அளிக்கும் ஆசிரிய இணையர்...

படம்
"நாங்க எங்க புள்ளைங்கள அரசுப் பள்ளியில் சேர்க்கும் போது எல்லோரும் திட்டுனாங்க, படிக்கிற புள்ளைங்கள கெடுக்குறீங்க அப்படின்னு சொன்னாங்க, இப்படி சொன்னவங்க பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கிற ஆசிரியர்கள் தான்", சொல்கிறார் பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் த.முருகையன். "என்னிடமும் அப்படித்தான் சொன்னாங்க. ரெண்டு பேருந் தான் நல்லா சம்பாதிக்கிறீங்கல்ல, அப்புறம் ஏன் அரசு பள்ளியில படிக்க வைக்கிறீங்கன்னு நிறைய பேர் கேட்டாங்க. எல்லா விமர்சனங்களையும் உள்ளுக்குள்ளேயே வச்சுக்கிட்டு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுப்பேன். நம்பிக்கைகளோட அரசு பள்ளியில எங்க பிள்ளைகளை படிக்க வச்சோம்" கூறுகிறார் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சகுந்தலா. ஆசிரியர்கள் முருகையன் சகுந்தலா இணையர் எடுத்த தீர்க்கமான முடிவு பல பெற்றோர்களுக்கு நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் கொடுத்திருக்கிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை என்ற விமர்சனம் பலதரப்பிலிருந்தும் இன்று வரை வந்து கொண்டே இரு

அறந்தாங்கியில் "வேங்கை வயல்" நூல் அறிமுக நிகழ்வு!

படம்
 சிபிஎம் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மரியாதைக்குரிய தோழர் கவிவர்மன் எழுதிய வேங்கை வயல் ஆவண நூலின் அறிமுக விழா திசைகள் அமைப்பு சார்பில் அறந்தாங்கியில் நடைபெற்றது. வேங்கைவயல் சாதிய வன்மத்தின் வடுக்களை தாங்கி நிற்கிறது இந்த புத்தகம்.   மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்குள் மலத்தை கலந்த ஆதிக்கச் சாதியின் சாக்கடைச் சிந்தனைகள் ஆதாரங்களோடு அச்சிடப்பட்டு இருக்கிறது இந்தப் புத்தகத்தில். அரசியலமைப்புச் சட்டத்தை எடுத்துச் செல்வது ஆட்சியராகவே இருந்தாலும் அவரின் ஆணைக்குக் கட்டுப்பட மறுத்து, ஆதிக்க வர்க்கம் ஆலயத்தை திறக்க விடாமல் செய்த அத்தனை திமிர் தனங்களையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.   சினிமா திரைக்கதைகளை மிஞ்சும் அளவிற்கு ஆலயத்திற்குள் நடந்த சாமியாடி நிகழ்வுகளை பதிந்து வைத்திருக்கிறார்.   "நாங்க ஒன்னாத்தான் இருக்கோம்!" என்று நாடகத்தை நடத்திட ஆதிக்கச் சாதி நடத்திய செயல்களை அம்பலப்படுத்தி இருக்கிறார்.  கோவிலுக்குள் நடந்த சமத்துவப் பொங்கல் விழாவில் கூட சாதியைக் கலந்து படைகளிட்ட சமூகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். கோவிலுக்குள் பட்டியல் இனத்தவர் புகுந்து சென்ற இ

பேராவூரணி வணிக நிறுவனத்தில் உழைப்பாளர் நாள் கொண்டாட்டம்!

படம்
பேராவூரணி பகுதியில் உள்ளது நீவி பிராய்லர்ஸ். இந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து நேற்று மே 1 உழைப்பாளர் நாளினை கேக் வெட்டி கொண்டாடினர்.   உழைக்கும் மக்களின் உயர்வை போற்றும் வகையில் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் மே ஒன்றாம் நாள் தொழிலாளர் நாள் கொண்டாடப்படுகிறது. உலகம் உழைப்பாளர்களால் இயங்குகிறது என்கிற தத்துவத்தை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதன் அடையாளமாக தொழிலாளர் ஒற்றுமைக்கான நாளாக மே ஒன்றாம் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.   தொழிலாளர் நலனை வலியுறுத்தும் பாட்டாளிகள் நாளை ஒவ்வொரு உழைப்பாளிகளும் பண்பாட்டு விழாவாக குடும்பத்தோடு கொண்டாட வேண்டும். தங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.   தமிழ்நாட்டில் தொழிலாளர் நலனுக்கு எதிரான 12 மணி நேர வேலையை அனுமதிக்கும் தொழிலாளர் திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு மே 1 இல் விலக்கிக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. தொழிலாளர் சமூகம் ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் தொழிலாளர் நலனை மீறி எந்த சட்டத்தையும் எந்த அரசுகளாலும் நடைமுறைப்படுத்த முடியாது என்பதை இது மெய்ப்பித்திருக்கிறது. உலகத் தொழிலாளர் நாளை தனது நிறுவனத்தில் பணியாற்ற