பள்ளியில் புதிய கட்டுமானம் மாணவர்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது!



பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி,  கை கழுவும் குழாய்,  டைல்ஸ் ஒட்டப்பட்ட மேடை மற்றும் வடிகால் ஆகியவை மாணவர்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.  


பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நா. வெங்கடேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரண்யா, தலைமை ஆசிரியர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலையில்  மாணவர்கள் புதிய குழாயை பயன்படுத்த தொடங்கினர்.


இதை அமைப்பதற்கு பேருதவி செய்த  ராயல் டிரேடர்ஸ் உரிமையாளர் பீ. அஜ்மீர் அலி,  பொறியாளர் திருப்பதி,  பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகாலட்சுமி சதீஸ், பெற்றோர் ஆசிரியர் கழக, பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் அனைவருக்கும், பள்ளி தலைமை ஆசிரியர் பாலச்சந்தர் நன்றி கூறினார்.


அரசு பள்ளி மேம்பாட்டுக்கான பணிகளை மேற்கொண்ட அனைவரையும் மெய்ச்சுடர் சார்பில் உள்ளம் நிறைந்து வாழ்த்துகிறோம்.


ஆசிரியர்,

மெய்ச்சுடர்.

27.04.2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா