"மனப்பொழிவின் மாய வாசனை" - போராட்டத்தில் பொழிந்த அன்பு
அன்புத் தோழர் ஷமீம் பானு இக்பால் எழுதிய "மனப்பொழிவின் மாய வாசனை" என்ற நூல் வாசிக்க நேர்ந்தது. நோயோடு போராடும் அனுபவத்தை இருபது தலைப்புகளில் இயல்பாக பேசுவதுபோல் உரையாடியிருக்கிறார் பானு. மருத்துவர்கள் நோய் குறித்து பேசுவதற்கும், ஒரு நோய்வாய்ப் பட்டவரே நோய்குறித்து பேசுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. குறிப்பாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவது அரிது. பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை பக்கத்து வீட்டாரிடம்கூட பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களின் பாடுகள் அதிகம். தமது இருப்பை, அடையாளத்தை, தலைமைப் பண்பை தலைகுப்புற கவிழ்க்கும் ஆற்றல் நோய்க்குண்டு. நோய் கண்டதும் பலர் காணாமல் போய்விடுவார்கள். நோய் தாக்கும் முன்பே எண்ணங்களால் மனம் தாக்குதலுக்கு உள்ளாகி மனம் துவண்டு போவார்கள். ஆற்றாமை ஆட்கொண்டுவிடும். தனிமை தள்ளாட்டத்தைத் தந்துவிட்டுச் செல்லும். சுமையாக உணர்வது பெரும் சுமையாகும். சுற்றங்கள் சூழ்ந்து கொள்கிறதா? அல்லது அன்னியப்படுகிறதா? என்பதெல்லாம் அறிந்து கொள்ளும் காலம் நோயுற்ற காலம். நோயுற்ற காலத்தின் மன உணர்வை எழுத்துக்களாக்கும் அளவுக்கு நம