பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் மகளிர் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. வளாகத்தில் அமைந்துள்ள பாரதி தையல் பயிற்சிப் பள்ளி ஆசிரியர் நித்யா தலைமையில் நடைபெற்ற விழாவில் பயிற்சி பள்ளி ஆசிரியர் உமா, பேராசிரியர் முனைவர் சண்முகப்பிரியா, பேராசிரியர் பிரபா, பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி யின் பள்ளி மேலாண்மை குழு தலைவி சரண்யா முன்னிலை வகித்தனர். "மகளிர் நாள் விழாவில் மட்டும் பெண்ணுரிமை சிந்தனைகளை பேசிவிட்டு பிறகு விட்டுவிடாமல் வாழ்வில் எல்லா சூழல்களிலும் பெண்ணுரிமைக் குரலை பெண்களே உயர்த்திப் பிடிக்க வேண்டும். தந்தை பெரியாரின், புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகளை பெண்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டும். தன்னை அடிமைப்படுத்தும் சமயச் சடங்குகளை, மதவாத சிந்தனைகளை பெண்கள் புறந்தள்ளி தங்களின் உரிமைகளைக் காத்துக் கொள்ள முன் வர வேண்டும்" என்று நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது. திராவிட விடுதலைக்காக பொறுப்பாளர் சித.திருவேங்கடம், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், ஆசிரியர் காஜாமுகைதீன், ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்ற பொறுப்பாளர் தா.கலைச்செல்வன், பாரதி ந.அமரேந்திரன், சமூக செயல்
கருத்துகள்
கருத்துரையிடுக