"அரசுப் பள்ளியில் படித்தே வங்கியில் உயர் அதிகாரியானேன்" - பேராவூரணி வங்கி மேலாளர் பெருமிதம்.



பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்களோடு பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தார் பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் திரு இராகவன் சூர்யேந்திரன்.
மேலும் வங்கி சார்பில் பள்ளியில் அமையவுள்ள நூலகத்திற்கு இருக்கைகள் வழங்கி மாணவர்களோடு உரையாடிய முதன்மை மேலாளர், "நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அரசுப் பள்ளியில் படித்துதான் வங்கியில் அதிகாரியாக உயர்ந்துள்ளேன். நீங்களும் நன்றாகப் படித்தால் உயர்ந்த நிலையை அடையலாம். பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்" என்று கூறினார்.
நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் பாலச்சந்தர், பேரூர் மன்ற உறுப்பினர்கள் மகாலெட்சுமி சதீஸ், ராஜலெட்சுமி ராமமூர்த்தி, அரசுக் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் பா.சண்முகப்பிரியா, எழுத்தாளர் கா.கான்முகமது, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சரண்யா, உறுப்பினர் சித.திருவேங்கடம், கல்வியாளர் கே.வி.கிருஷ்ணன், மேனாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் த.பழனிவேல், தமிழ்வழிக் கல்வி இயக்கப் பொறுப்பாளர்கள் பாரதி ந. அமரேந்திரன், செ.சிவகுமார், தற்காப்புக் கலைப் பயிற்றுநர் கிருஷ்ணமூர்த்தி, சமையற்கலை வல்லுநர் ம.சரவணன், பள்ளி ஆரியர்கள் சுபா, சுபாஸ், பாலசுந்தரி, இல்லம்தேடிக் கல்வித்திட்ட ஆசிரியர் பிரதீபா மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா