குருதிக்கொடை முகாம்

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று 29 01.2024 திங்கட்கிழமை 14 ஆவது குருதிக்கொடை முகாம் நடைபெற்றது .

பேராவூரணி பேரூராட்சி விழா அரங்கில் நடைபெற்ற  இந்தக் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வில் பெருமளவில் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

குருதி வகையறிந்து உரிய மருத்துவ ஆய்வுகள் செய்து பொதுமக்களிடமிருந்து குருதிக்கொடை பெறப்பட்டது. 


குருதியை கொடையாக கொடுத்தவர்களுக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு மருத்துவ துறையில் இருந்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


ஒரு மனிதரை வாழ வைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் என்ற திருக்குர்ஆன் வசனத்தை முன்னிறுத்தி இந்தக் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

 பகல் 2 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வுக்காக கடந்த சில நாட்களாகவே பேராவூரணி நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில்  குருதிக்கொடை குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கைகளை தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் பொதுமக்களிடம் வழங்கி வந்தனர். 


தமிழ்நாடு முழுவதும் குருதிக்கொடை வழங்குவதில் முன் நின்று செயலாற்றி வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கு மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.












கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா