"மாணவர்களுக்கான கலைப் போட்டிகள் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது" நூலக வார விழாவில் பேச்சு.



56 ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடம் நூல் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் "நூலகம் ஓர் ஆலயம்" என்ற தலைப்பில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.


இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளை மாவட்ட கல்வி அலுவலர் திரு சுதாகர் தொடங்கி வைத்து  பேசியதாவது, 

"உலக அளவில் புகழ்பெற்ற சாதனையாளர்கள் அனைவரும் நூலகங்களில் நூல்களை தொடர்ந்து வாசித்தவர்கள்.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அறிவர் அம்பேத்கர் அவர்கள் தமது வாழ்வின் பெரும் பகுதியை நூலகங்களில் செலவு செய்தவர்.  இது போன்ற கலைப் போட்டிகள் மாணவர்கள் வாசிக்க கிடைத்த வாய்ப்பாக கருதி போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்ட வேண்டும்"  என்றார். 


நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு சக்திவேல், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.  


பள்ளி அளவில் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடத்தப்படும் இறுதிப் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப் படும்.  மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மானவர்களுக்கு பரிசுகளும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா