30 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் ஏழாவது மாநாடு நாளை (03.04.2022) திருச்சிராப்பள்ளியில் நடைபெறுகிறது.



தோழர் அ.சி.சின்னப்பத்தமிழர் தலைமையில் இயங்கும் தமிழ்வழிக் கல்வி இயக்கம் 30 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.


தமிழ்வழிக் கல்விக்காக, தமிழ் மொழி வளர்ச்சிக்காக, தமிழர்களின் நலன் காத்திட தொடர்ந்து களம் நின்று செயலாற்றி வரும் அமைப்புதான் தமிழ்வழிக் கல்வி இயக்கம். 


தமிழ்நாட்டில் பல்வேறு பாடத் திட்ட முறைகள் பள்ளிக்கல்வியில் நடைமுறையில் இருந்தபோது அதை சமச்சீர் முறையாக மாற்றுவதற்கு தொடர்ந்து போராடியது இந்த அமைப்பு. இடைக்காலத்தில் சமச்சீர் கல்வி முறையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த மறுத்தபோது களம் நின்று சட்டப் போராட்டம் நடத்தி நடைமுறைப்படுத்த முனைப்புக் காட்டியது. 


தமிழ்நாட்டில் தமிழ் படித்தவர்களுக்கு வேலை என்ற நிலையை உருவாக்க பொதுத் தளத்திலும், அரசியல் களத்திலும், பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபடுத்திக்கொண்டு தமிழர்களின் நலன் காக்க தொடர்ந்து பங்காற்றி வரும் தமிழ்வழிக் கல்வி இயக்கம் தனது 30 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்து திருச்சிராப்பள்ளியில் தனது ஏழாவது மாநாட்டினை நடத்துகிறது.


பல்வேறு தலைப்புகளில் தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமைகள் பங்கேற்கும் கருத்தரங்கம், ஆய்வுரைகள் மாநாட்டில் நடைபெற உள்ளது.


தமிழ்நாட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிறப்புரையாற்றுகிறார்.


தமிழ் நெறியால் உலகாளும் உயர்வை தமிழர்கள் ஒவ்வொருவரும் பெற இந்த மாநாடு ஒரு படிக்கல்லாக அமையும்.


மாநாட்டில் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா