"நாம் ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம், பெண்கள் இன்னும் விழிப்புடன் இருக்கவேண்டும்!" காவல் ஆய்வாளர் செல்வி பேச்சு.
பேராவூரணி ஜெசிஐ - நாடி பவுண்டேசன் இணைந்து நடத்திய பெண்களுக்கான ஐந்து நாள் இலவச கணினி பயிற்சியின் நிறைவு விழா பேராவூரணியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட பேராவூரணி காவல் ஆய்வாளர் செல்வி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர் தமது உரையில், "நாம் இன்னும் ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். பெண்கள் மிகவும் சரியாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். நம் நலனில் மிகவும் அக்கறை கொண்டவர்கள் பெற்றோர்கள்தான். பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். பெண்கள் சுதந்திர உணர்வோடும் மிகுந்த கவனத்தோடும் இருக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இங்கு பயிற்சி எடுத்துக்கொண்ட மாணவிகள் வாழ்வில் உயர்ந்த இலக்குகள் கொண்டு செயல்பட வேண்டும்" என்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குருவிக்கரம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அஸ்வினி பெண் கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களிடம் உரையாடினார். பேராசிரியர் வேத கரம்சந்த் காந்தி, மெய்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். பயிற்சியில் பெற்ற அனுபவங்களை மாணவிகள் கூறினர். ச