விருது மூலம் கிடைத்த பணத்தை பள்ளிக்கே வழங்கிய நல்லாசிரியர்
விருது மூலம் கிடைத்த பணத்தை பள்ளிக்கே வழங்கிய நல்லாசிரியர் ------------ பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் ஆசிரியர் காஜா முகைதீன். ஆசிரியப் பணியின் மீது காதலோடு பணியாற்றி வருபவர். ஆசிரியர் பணியையும் தாண்டி சூழலியல் சார்ந்தும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். பேரிடர் காலங்களில் தனது பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் குடும்பங்களுக்கு உதவி செய்து வருபவர். இவரின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகளால் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 60 இல் இருந்து படிப்படியாக உயர்ந்து தற்பொழுது 120 மாணவர்களுக்கு மேல் படித்து வருகிறார்கள். ஆஸ்பெட்டாஸ் கொட்டகைக்குள் இருந்த இந்தப் பள்ளியை கஜா புயல் நிர்மூலமாக்கியது. துரிதமாகச் செயல்பட்டு உடனடியாக கொட்டகையை சீரமைத்து பள்ளியை தொடங்க பெரும் முயற்சி மேற்கொண்டார். தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெரும் ஒத்துழைப்போடு இப்பொழுது கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு தனியார் பள்ளியையும் மிஞ்சும் வகையில் வண்ணமயமான வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இவர் நல்லாசிரியர் விருதுடன் தனக்கு வழங்கப்பட்ட தொகையை ஸ்மார