என் பெயர் அபிநயா
என் பெயர் அபிநயா
பெயர் அபிநயா
தந்தை பெயர் ராமமூர்த்தி
தாயின் பெயர் வாசுகி
பாட்டியின் பெயர் பெரியநாயகி
படித்தது குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி
பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம்
விவசாயப் பாடத்தை பன்னிரண்டாம் வகுப்பில் முதன்மை பாடமாக எடுத்துப் படித்த இந்த பெண் கால்நடை மருத்துவம் படிக்க தீரா காதலோடு விண்ணப்பித்தார்.
சென்னை கலந்தாய்வில் கலந்து கொண்டு, வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கொள்வதற்கான கடிதத்தையும் பெற்றுவிட்டார்.
மருத்துவர் கனவு பலித்துவிட்டது என்று மகிழ்ந்த அபிநயாவுக்கு அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
கலந்தாய்வுக்கு சென்று வரவே கந்து வட்டிக்கு கடன் வாங்கி சென்ற அந்தப் பெண் கல்லூரிக்கு கட்டணம் செலுத்த என்ன செய்வார்?
பள்ளியில் முதலிடம் பிடித்து அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான இடம் கிடைத்தும் கல்லூரியில் சேர்வதற்கு முடியாமல் கலங்கிய விழிகளோடு காத்திருக்கிறார்.
கஜாவால் காணாமல் போன குடிசையை சரி செய்ய வாங்கிய கடனையே, அடைக்க முடியாமல் அல்லாடுகிறது அந்தக் குடும்பம்.
ஊடக வெளிச்சம் சென்று சேர முடியாத குக்கிராமத்தில் பிறந்தது இந்தப் பெண்ணின் குற்றமா?
குருவிக்கரம்பை போன்ற குக்கிராமத்தில் அரசுப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்து, தலைமுறையையே தலைகீழாய் மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தப் பெண்ணின் கனவுகளை நனவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு....
கருத்துகள்
கருத்துரையிடுக