அரசுப் பள்ளிகளை நோக்கி ஆசிரியர்கள்
அரசுப் பள்ளிகளை நோக்கி ஆசிரியர்கள் ------------------------------------------------------------------- அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பதில்லை என்ற விமர்சனம் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகள் மீது பொதுமக்களிடம் இருக்கும் எதிர்மறையான சிந்தனை போக்கு, அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களிடமும் அவர்களின் இணையர்களிடமும் தொடர்ந்து இருந்து வருகிறது. ஒரு ஆசிரியர் தனது பிள்ளையை அரசுப் பள்ளிகள் சேர்த்திட நினைத்தால் அந்த ஆசிரியரின் இணையர் ( கணவன் அல்லது மனைவி ) அதை அனுமதிப்பதில்லை. தனியார் பள்ளிகள் மீதான மோகம் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குடும்பத்திலும் இருப்பதுதான் இதற்கு காரணம். இந்நிலை சிறிது சிறிதாக மாற்றம் பெற தொடங்கியுள்ளது. தற்போது பணியில் சேர்ந்துள்ள இளம் தலைமுறை ஆசிரியர்களிடம் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான சிந்தனையும் அப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் நிலையும் தொடங்கியுள்ளது. ஐந்து ஆண்டுக்கு முன்னர் பொன்னாங்கண்ணிகாடு நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முருகையன் த