புதுகை மருத்துவ கல்லூரிக்கு உடல் தானம்

பேராவூரணி அருகே உள்ள சீவன்குறிச்சியைச்  சேர்ந்த ஜவுளி வியாபாரி நா.து. நாகலிங்கம் (73). வயது முதிர்வின் காரணமாக  செவ்வாய்க்கிழமை    மாலை காலமானார்.  நாகலிங்கத்தின் விருப்பப்படி  அவரது உடலை தானம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். 
அவரது உடலுக்கு புதன்கிழமை  அஞ்சலி செலுத்திய உறவினர்கள்,  பின்னர் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் ஒப்படைத்தனர். தந்தையின் உடலை தானம் செய்த நாகலிங்கத்தின் பிள்ளைகளுக்கு முதல்வர் மீனாட்சி சுந்தரம் நன்றி தெரிவித்தார். நாகலிங்கத்திற்கு மனைவி நா. தேவகி,  மகன்கள்  நா. பாலசுப்பிரமணியன், நா. முருகேசன்,  பேராவூரணி தமிழ்ப் பல்கலைக் கழக தொலைநிலைக்கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் நா.வெங்கடேசன் மற்றும் மகள் மங்கையர்க்கரசி ஆகியோர் உள்ளனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா